அல்செஸ்டிஸ்
alcesṭis
அல்செஸ்டிஸ் கிரேக்கப் புராணக் கதையில் தெசலி அரசன் அட்மிட்டனின் மனைவி.
அல்செஸ்டிஸ் கிரேக்கப் புராணக் கதையில் தெசலி அரசன் அட்மிட்டனின் மனைவி. அவனுக்காக வேறு யாராவது தமது உயிரைக் கொடுத்தாலொழிய அவன் இறக்க வேண்டும் என்று விதியிருந்தது. அவனுடைய பெற்றோர் முதியவர்களாயினும், அவன் பொருட்டுத் தமது உயிரைக் கொடுக்க மறுத்துவிட்டனர். மனைவி அல்செஸ்டிஸ் தன்னுயிரைக் கொடுக்க ஒப்புக்கொண்டாள். அட்மிட்டஸ் உயிர்த்து எழ எழ, அல்செஸ்டிஸின் உயிர் போய்க்கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் ஹெர்குலிஸ் வந்து யமனுடன் போராடி அவனை வென்றான். அல்செஸ்டிஸ் உயிருடன் எழுந்தாள். இந்தக் கதையை யுரிப்பிடீஸ் என்னும் கிரேக்கக் கவி நாடகமாக எழுதியிருக்கிறார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 244)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/caamhwzw/
தமிழ்“அல்செஸ்டிஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caamhwzw/APA
Oliyon Research. (2026). அல்செஸ்டிஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/caamhwzw/MLA
"அல்செஸ்டிஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/caamhwzw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment