சிறுநீர்ப் பை ஒழுங்கீனங்கள்
ciṟunīrp pai oḻuṅkīṉaṅkaḷ
சிறுநீர்ப் பை—சிறுநீர்ப் புற வழிக் கால்வாயின் தலைப்புப் பகுதியிலிருந்து, சிறுநீர்ப் பையின் எபிதீலியம் உருவாகிறது.
சிறுநீர்ப் பை—சிறுநீர்ப் புற வழிக் கால்வாயின் தலைப்புப் பகுதியிலிருந்து, சிறுநீர்ப் பையின் எபிதீலியம் உருவாகிறது. சிறுநீர்ப் பையின் சிலேட்டுமத் தசைச் சுவர்கள், உள்ளுறுப்புச் சார்ந்த இடைப் படையிலிருந்து (splanchno pleuric mesoderm) உருவாகின்றன. இவ்விதம் உருவாகும் சிறுநீர்ப் பையில் சில ஒழுங்கீனங்கள் தோன்றலாம்.
சிறுநீர்ப் பைத் துளை, குறுக்குச் சுவர்களால் பல விரிவுகளாக இருக்கலாம். சிறுநீர்ப் பையின் நடுவே ஒரு குறுக்கம் உருவாவதால், சிறுநீர்ப் பை இரண்டு அறைகளாக (மேல், கீழ்) உருவாகலாம். சிறுநீர்ப் பை, மலக் குடலுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். முன் புற வயிற்றுச் சுவரின் கீழ்ப் பகுதியும், சிறுநீர்ப் பையின் முன் புறச் சுவரும் இல்லாமல் இருக்கலாம். அப்போது சிறுநீர்ப் பையின் கழிவு, உடலின் பரப்பிலேயே தெரியும். இதையே தவற்றிட நீர்ப் பை (ectopia vesicae) என்பர். இத்துடன் சிறுநீர்ப புற வழி, ஆண் குறியின் மேற்புறமாக அமைந்திருக்கலாம். பிறவி ஊனமாகப் பக்க வளர்ச்சிப் பையும் (diverticula) உருவாகலாம். —சாரதா கதிரேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 358)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c993fzhb/
தமிழ்“சிறுநீர்ப் பை ஒழுங்கீனங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c993fzhb/APA
Oliyon Research. (2026). சிறுநீர்ப் பை ஒழுங்கீனங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c993fzhb/MLA
"சிறுநீர்ப் பை ஒழுங்கீனங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c993fzhb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment