இளவெயினனார்
iḷaveyiṉaṉār
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயரிலமைந்துள்ள எயினன் என்னும் சொல் இவர் எயின மரபினராக – வேட்டுவக் குடியினராக இருக்கலாம் என்பதனைத் தெரிவிக்கிறது. இவர் பாடலொன்று நற்றிணையில் (263) அமைந்துள்ளது. இது உள்ளுறை நயமிக்க பாலைத்திணைப் பாடலாகும். இதில் ‘கழனி ஒழிந்த கொடுவாய்ப் பேடைக்கு, முடமுதிர் நாரை கடல்மீன் ஒய்யும்’ என்னும் பகுதியில் வயலிலே தங்கிய பேடைக்குச் சேவல் கடல்மீனைக் கொண்டு வந்து கொடுத்துதவுதல் போலத் தலைவியைத் தம் இல்லத்தே கொண்டு வைத்துத் தாமும் பொருளைத் தேடி வந்து கொடுத்து, அவளுடன் இன்பமான இல்வாழ்க்கை நடத்துதல் வேண்டும் என்னும் கருத்தினைத் தோழி தலைவியிடம் கூறும் பாங்கில் தலைவனுக்குக் குறிப்பால் அறிவுறுத்துவது நயமுடையதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 490)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4u4n5pw/
தமிழ்“இளவெயினனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c4u4n5pw/APA
Oliyon Research. (2026). இளவெயினனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/c4u4n5pw/MLA
"இளவெயினனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/c4u4n5pw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment