தொகுதி மறையெழுத்து

tokuti maṟaiyeḻuttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத் தரவுப் பெறப்படுகிறது. இதற்குப் பல்வேறு மறையாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தனி பொதுமறைக் குறிமுறை. ஒரு தனிமறைக் குறியைப் பயன்படுத்தித் தரவுவை மறையாக்கம் செய்வர். அதற்குரிய பொது மறைக்குறியைப் பயன்படுத்கி மறைவிலக்கம் செய்வர். தரவுவைக் குறிப்பிட்ட துண்மி எண்ணிக்கையுள்ள (எடுத்துக் காட்டாக 64 துண்மிகள்) தொகுதிகளாகப் பிரித்து அத்தொகுதியை தனிமறைக் குறி மூலம் மறையாக்கம் செய்யலாம். மறையாக்கம் செய்யப்பட்ட தரவுவிலும் மூலத் தரவுவிலிருந்த அதே எண்ணிக்கையிலான துண்மிகளே இருக்கும். இம்முறைக்கு தொகுதி தனி மறைக்குறி என்று பெயர் — block cipher
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொகுதி மறைக் குறி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 165)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bzgjv9wm/

தமிழ்
“தொகுதி மறையெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzgjv9wm/
APA
Oliyon Research. (2026). தொகுதி மறையெழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bzgjv9wm/
MLA
"தொகுதி மறையெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bzgjv9wm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment