வட்ட ரம்பம்

vaṭṭa rampam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circumference : பரிதி-சுற்றளவு : ஒரு வட்டத்தின் சுற்றளவு circumlunar: (விண்.) நிலவு வலம் : ஒரு விண்வெளிக்கலம் நிலவை வலம்வந்து பூமிக்குத் திரும்பும் பயணம் circumscribe : சுற்றி வட்டமிடுதல் : வெட்டாத் தொடு வரையாகச் சுற்றுவட்டமிடுதல். சுற்று வட்ட எல்லைக்குட்படுத்துதல் ciseleur : (உலோ.) செதுக்கு ஒப்பனையாளர் : உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர் cisiunar : (விண்.) நிலவிடை வெளி : பூமிக்கும் நில்வின் சுற்று வழிக்குமிடையிலான இடைவெளிப்பரப்பு citizens band : (மின்.) குடி அலை வரிசை : தனிப்பட்ட குடி மக்கள் இயக்கும் இருவழி வானொலிச் செய்தித் தொடர்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவெண் அலைவரிசை. இதனை இயக்குபவர்கள் தொழில்நுட்ப ஆய்வுகளைத் தெரிவித்தல் ஆகாது citric acid : (வேதி.) சைட்ரிக் அமிலம் : நாரத்தை வகையைச் சேர்ந்த எலுமிச்சம்பழம், நாரத்தங்காய் போன்றவற்றிலிருந்து வடித்திறக்கிய ஒரு வகை அமிலம். இது காடிப் பொருள்கள் வகையில் பதனிடு செய்யதக்க மூன்று நீரக அணுக்களையுடையது. இது புளிப்புச் சுவையுடையது. இது மருந்துகளிலும் நறுமணப் பொருள்களிலும், ரொட்டித் தொழிலிலும் பயன்படுகிறது civil enginear : பொதுப்பணி பொறியாளர் : கட்டிடங்கள்,நெடுஞ்சாலைகள், இருப்புப்பாதைகள், எஃகுக் கட்டுமானங்கள் போன்ற பொதுப்பணிகளை வடிவமைத்து கட்டுமானம் செய்யும் பொறியாளர் clamp : (எந்.) பற்றுக் கருவி : வேலைப்பாடு செய்வதற்குரிய பொருள்களின் பகுதியைப் பற்றிக் கொள்வதற்கான ஒரு கருவி. இது இரும்பிலும் மரத்திலும் அமைந்திருக்கும் clamp coupling : (எந்.) பற்று இணைப்பிகள் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளை கொண்ட ஒரு சுழல் தண்டு இணைப்பி. இது குறுக்காயமமைந்த மரையாணிகள் மூலமாக இறுகப் பற்றும்படி செய்யப்படுகிறது clamp dog : (எந்.) பற்று வளை இருப்பாணி : கடைசல் வேலை செய்ய வேண்டிய பொருள்களைப் பற்றி இணைத்துப் பிடித்துக் கொள்ளும் பகர வடிவ வளை இருப்பாணி. இதில் இரு குறட்டு அலகுகளும் இருமரையாணிகளும் பற்றிக் கொள்வதற்காக அமைந்திருக்கும் clamping bars : (வார்.) பற்றுச் சலாகைகள் : வார்ப்படத்தில் வாயுக்களின் விரிவாக்கத்தினால் விரிசல் ஏற்படாதவாறு தடுத்து வார்ப்படத்தின் பகுதிகளை ஒருங்கிணைத்துப் பற்றிக் கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் சலாகைகள். இந்தச் சலாகைகளைத் தக்கவாறு அமைத்து கொள்ளலாம் அல்லது திண்மையாக வைத்துக் கொள்ளலாம் clamping screw : பற்றுத் திருகு : வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருள்களை நெருக்கிப் பிடித்துக் கொள்கிற அல்லது ஒருங்கிணைத்துப்_பற்றிக் கொள்கிற ஒரு வகைத் திருதி, இறுகப் பற்றிக் கொள்கிற ஒரு திருகினையும் இது குறிக்கும் clap board : (க.க.) சாரல் தடுக்கு : மழைச் சாரல் அடிக்காதபடி கதவின் மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை clapper box : (எந்.) இழைப்புப் பெட்டி : ஒரு வார்ப்புப் பொறியில் உள்ள கருவியைப் பற்றிக்கொள்ளும் சாதனத்தின் ஊசலாடும் உறுப்பு. இது வேலைப்பாடு செய்ய வேண்டிய பொருளின் மீது திரும்பும் இழைப்பின் போது சரளமாகச் சாதனங்கள் செல்வதற்கு இடமளிக்கிறது clap post : மூடு நிலைக்கால் : ஒரு நிலையடுக்கின் கதவு மோதி மூடிக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான நிலைக்கால் classical : (க.க.) செவ்வியல் : பண்டைய கிரேக்க, ரோமானியக் கட்டிடக் கலையினைக் குறிக்கும் சொல் classic moulding : (க.க) செவ்வியல் வார்ப்படம் : பண்டைய கிரேக்க, ரோமானியச் செவ்வியல் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது போன்ற வார்ப்படம் classification : வகைப்படுத்துதல் : எளிதாக அடையாளங்கண்டு கொள்வதற்காக வகையியல்புகள் அல்லது பண்பியல்புகள் வாரியாக வகைப்படுத்துதல் clavi chord : இசைக்கருவி : இக்காலப் பியானோவுக்கு முன்னோடியாக விளங்கிய ஆதி இசைக்கருவி claw coupling (எந்.) வளைநக இணைப்பி : சுழல் தண்டுகளை உடனடியாக இணைக்க வேண்டியிருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகைத் தளர்வான இணைப்பி. இதில் வளைந்த நகம் போன்ற உகிருகள் அமைந்திருக்கும. claw hammer : (மர.) வார்சுத்தியல் : ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல். தச்சு வேலை செய்பவர் இதனை முக்கியமாகப் பயன்படுத்துகின்றனர். clay (க.க.) களிமண் : இது சாதாரண மண் வகையைச் சேர்ந்தது. இது காய்ந்தால் இறுகலாக இருக்கும்; ஆனால் எனிதில் உடைந்துவிடும். ஈரமாக இருக்கும்போது குழைமத் தன்மையுடையது. செங்கல் தயாரிக்க இது உதவுகிறது clay wash : (வார்.) களிமண் வண்டல் : நீரில் கரைந்த களிமண் வண்டல். வாயடைப்பான்கள்; குடுவைகள் போன்றவற்றில் மேற்படலப் பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது clean: (அச்சு.) துப்புரவான பணி : நன்கு அச்சிடப்பட்ட காகிதம்; அச்சுப் பணி; கறைபடியாமல் தூய்மையாக முத்திரையிடப்பட்ட மேலுறை clean cut: மாசு மருவற்ற வேலைப்பாடு : எந்திரத்தில் மாசு மருவற்றிருக்கும் மேற்புரப்பு மாசு மருவின்றிச் செய்யப்படும் வேலைப்பாடு clean proof : (அச்சு.) மாசற்ற பார்வைப்படி : திருத்தங்கள் அதி கம் இல்லாத தெளிவான பார்வைப்படி இது திருத்தங்கள் மிகுந்த தெளிவற்ற பார்வைப்படிகளுக்கு நேர்மாறானது clean thread : (எந்.) மாசற்ற இழை : திருகில் கூர்மையாகவும், வழுவழுப்பாகவும், மாசு மருவின்றியும் இருக்கும் இழை clearance : (எந்.) இடைவெளி : (1) கடைசல் எந்திரத்தில் வெட்டு முனைக்கும், கடைசல் செய்ய வேண்டிய பொருளின் செங்குத்து நிலைக்கும் இடையிலான கோணம் 3° அளவுக்குக் குறையாமலும் 10° அளவுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும் (2) அண்மைப் பக்கங்களுக்கு இடையிலான திறந்த இடைவெளி அளவு cleat : ஆப்பு : ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் பிணைக்கும் நோக்கத்திற்காக அதனுடன் பிணைக்கப்படும் அல்லது சுவரில் ஆணியால் அறைந்து இறுக்கப்படும் மரத்தினாலான அல்லது உலோகத்திலான ஒரு துண்டு cleavage: பிளவு: பிளத்தல், பிரித்தல் அல்லது பிளவுறுத்தல். ஒரு பாறையில் ஒரு குறிப்பிட்ட முறையில் பிளவு ஏற்படும் போக்கு cleft : (எந்.) வெடிப்பு : இதுவும் ஒருவகைப் பிளவுதான். இது ரம்பத்தால் அறுத்த அல்லது வெட்டிய பிளவைவிட வலுவானது. இது மரக் கைப்பிடிகள் திருகுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுகிறது clevis : (எந்.) வளைகம்பி கயிறு கம்பி இணைப்பதற்காக விட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இருப்புவளை கம்பி climp cut : (எந்.) ஏற்ற முறை வெட்டுதல் : வெட்டு எந்திரத்தில் உலோகத்தை வெட்டுவதற்கான ஒரு முறை. இதில் வெட்டுங் கருவியின் சுழற்சித் திசையில் மேசை நகர்ந்து செல்கிறது clinch : (பட்.) மடக்கி இறுக்குதல்; ஆணியை அடித்து மடக்கி இருக்குதல் clinker rim : (தானி.) கட்டிருக்கு வட்ட விளிம்பு : இது ஒரு சக்கரத்தின் வட்ட விளிம்பு. இதன் இரு பக்கங்களிலும் விளிம்பு அல்லது வரிப்பள்ளம் அமைந்திருக்கும். அதில் டயரின் தட்டையான விளிம்பு பொருந்திக் கொள்ளும். காற்றடைக்கும்போது டயர் இந்த விளிம்பில் இறுக்கமாக அழுந்திக் கொள்ளும் clinker : சாம்பறகட்டி : கொல்லுலைச் சாம்பற்கட்டி clip angles : (பொறி.) பிடிப்புக் கோணங்கள் : இரு உறுப்புகளை இணைப்பதற்குப் பயன்படும் சிறு தூண்களின் கோணங்கள் clipper : அதிர்வுப் பிரிவு : வீடியோபடத் தகவலிலிருந்து ஒரே கால நிகழ்வு அதிர்வுகளைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு முறை clipping : கத்தரித்தல் : சில வகைத் துணிகளில் மேற்பரப்பு சமநீளத்திற்கு வெட்டச் செம்மைப்படுத்துதல் clock wise : வலஞ்சுழித்த : கடிகார முள்செல்லும் திசையில் வலஞ்சுழித்து இடமிருந்து வலம்செல்லுதல. clog : தடுப்பு : முட்டுக் கட்டையிடுதல்; பளுவினால் இயக்கம் தடித்தல்; அந்நியப் பொருளால் இயக்கம் தடைபடுதல் close (க.க.) சுற்றெல்லை: தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை closed circuit : (மின்.) முடிப்புச் சுற்றுவழி : (1) மின் விசை ஆதாரத்திலிருந்து ஒரு புறச் சுற்றுவழியாகச் சென்று மீண்டும் ஆதாரத்திற்குத் திரும்பி வருகிற முழுமையான சுற்றுவழி. இது ஒரு கட்டுப்பாட்டு விசையினை அமைத்து நிகழ்த்தப்படுகிறது (2) வரையறுக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு மட்டும் உரிய தொலைக்காட்சி முறை closed lock joint : (உலோ. வே.) மூடிப்பூட்டிய இணைப்பு : இருமுனைகளைக் கொக்கியால் பிணைத்து ஏற்படுத்தப்படும் ஒரு வகைப்பிணைப்பு. இந்தப் பிணைப்பில் ஒட்டவைப்பு செய்யப்படுவதில்லை close fit : அணுக்கத் திருகிழை : மிக நெருக்கமாவுள்ள இந்தத் திருகிழை மிகத்துல்லியம் தேவைப்படும் விமான உறுப்புகளில் பயன்படுத்தப்படுகிறது close nipple : (கம்.) குறுகிய இழை : சாதாரணக் குழாய் இழையினைவிட இரண்டு முள்ள இழை. இதில், இரு தொகுதி இழைகளுக்கிடையே தோள்மூட்டு எதுவும் இருக்காது closure : (க.க) அடைப்பு : ஒரு வழியின் முடிவிடத்தை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செங்கலின் பகுதி cloth of estate : அலங்காரத் திரைச் சீலை : அரியணை மீது அல்லது சிம்மாசனத்தின் மீது அலங்காரமாகத் தொங்கவிடப்படும் திரைச் சீலை cluster : (மின்.) சரவிளக்கு : இரண்டுக்கு மேற்பட்ட விளக்குகளையுடைய விளக்குச் சரம். இந்த விளக்குகள் நெருக்கமான இடைவெளிகளில் அமைந்திருக்கும் clustered (க.க.) கொத்துச்சரம் : திரண்ட கொத்தாகச் சேர்க்கப்பட்டுள்ள சரம் clutch : (தானி; எந்.) ஊடிணைப்பி : உந்து வண்டிகளில் இயங்குறுப்புகளை ஒடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு. இதிலுள்ள மிதி கட்டையை அழுத்த உந்துவண்டி சக்கரம் நிற்கும் மிதி கட்டையை விடுவிக்கும்போது சக்கரம் ஒடும் சுழல் தண்டுகளுக்கிடையே தற்காலிக இணைப்பை ஏற்படுத்தும் சாதனம் clutch pedal : (தானி; எந்.) ஊடிணைப்பி மிதிகட்டை : ஊடிணைப்பியை இணைக்கவும், துண்டிக்கவும் கூடிய இடதுகால் மிதிகட்டை clutch pressure plate : (தானி; எந்.) ஊடிணைப்பி அழுத்தக் தகடு : ஊடிணைப்பியின் ஒருங்கின்ணப்பில், நெம்புகோல்களின் மீது ஏற்றப்பட்ட ஒர் உலோக வளையத்தின் பகுதி. திருகு சுழலான விற்சுருள்கள் இந்த ஊடிணைப்பித் தகட்டின் மீது அழுத்தம் உண்டாக்கி தேவையான உராய்வினை ஏற்படுத்தி விசையினை எஞ்சினிலிருந்து விசை ஊடிணைப்புக்கு அனுப்புகிறது coal : நிலக்கரி : பூழியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிறமான அல்லது கருநிறமான கணிமப் பொருள். இது எளிதில் தீப்பற்றத் கூடியூது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய தாவரப்படிவு களால் இது உண்டாகிறது. சுரங்கங்களிலிருந்து தோண்டியெடுக்கப்படும் இது முக்கியமாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து பல முக்கிய வேதியியல் துணைப் பொருள்களும் கிடைக்கின்றன coal gas : நிலக்கரி வாயு : நிலக்கீலார்ந்த நிலக்கரியைச் சிதைத்து வடித்தல் மூலம் பெறப்படும் வாயு. இது விளக்கு எரிப்பதற்கும் வெப்பம் உண்டாக்குவதற்கும் பயன்படுகிறது coal sizes : நிலக்கரி வடிவளவுகள் : விற்பனை செய்யப்படும் நிலக்கீலற்ற நிலக்கரியின் வடிவளவுகள். இவை நிலக்கரி உட்செல்லக் கூடிய அல்லது மேற்செல்லக் கூடிய ஒரு துவாரத்தின் விட்டத்தின் அளவுகளில் அமைந்திருக்கும் coat tar: கீல் கரி எண்ணெய் : கரு நிற நிலக்கீல். இது நிலக்கரி வாயு உற்பத்தியில் உறைவிக்கப்பட்ட நிலக்கீலார்ந்த நிலக்கரியிலிருந்து வாலை வடித்தல் மூலம் வடித்திறக்கப்பட்டது. இது கலைத் துறையில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது coat : வண்ணப்பூச்சு : வண்ணம், அரைச்சாந்து போன்ற பொருள்களை ஒரே சமயத்தில் மேற்படலமாகப் பூசுதல் coated lens : மேற்படல ஆடிகள் : சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சூடாக்குவதன் மூலம் உண்டாகும் மிக மெல்லிய மேற்படலம். இதன் மூலம் திறம்பாடு அதிகரிக்கிறது coated paper : மேற்படலமிட்ட காகிதம் : மிகவும் பளபளப்பாக்கப்பட்ட காகிதம். மிக உயர்ந்த ரக நுண்பதிவுப் பட வேலைப்பாடுகளுக்குத் தேவையான வழுவழுப்புடன் அல்லது மங்கலான மெருகுடன் இது தயாரிக்கப்படுகிறது coaxial : (கணி.) பொது ஊடச்சுடைய : நீள் வட்டம் அல்லது நிமிர் மாலை வட்டம் போன்ற ஒருங்கிணைகிற அச்சுக்களையுடைய எதுவும் coaxial cable : பொது இருசுத் தந்திவடம் : தந்தி, தொலைபேசி அறிகுறியீடுகளுடன் தொலை நோக்கிக் குறியீடுகளையும் ஒருங்கே அனுப்பும்படி பொருந்திய தந்தி வட அமைவு cobalt : (கணி.) கோபால்ட் : இது வெண்ணிறமான உலோகம். இது இரும்பு வகையைச் சேர்ந்தது. கடினமானது. இது அணு எண் 27 உடைய ஒரு தனிமம். உலோக வகையிலிருந்து நீல வண்ணப் பொருள் தயாரிக்க மிகவும் பயன்படுகிறது cobalt blue : கோபால்ட் நீலம் : வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப் பொருள் cobaltcrom steel : கோபால்ட் குரோம் எஃகு : இது ஒர் எஃகு உலோகக் கலவை. இதில் 1.5% கார்பனும் 12.5% குரோமியமும் 3.5% கோபால்ட்டும் கலந்திருக்கும். இது வெட்டுக் கருவிகள் தயாரிக்க ஏற்றது cocaine : (மருந்.) கோக்கைன் : இதன் அமெரிக்காவைச் சேர்ந்த கோக்கரச் செடி வகையிலிருந்து எடுக்கப்படும், உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு. அறுவைச் சிகிச்சையின் போது வலி தெரியாமலிருக்க இது பயன்படுத்தப்படுகிறது coccus : (உயி.) முட்டுப்பூச்சி : மூட்டுப் பூச்சித் தொடர்புடைய பூச்சி இனம் çochineal : (வேதி.) செஞ்சாயம் : இந்திர கோபம் எனப்படும் செந்நிறப் பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப் பொருள் cock : அடைப்பு முளை : அடைப்பு முளை வடிவிலுள்ள ஒருவகை ஒரதர். இதில் திரவங்கள் அல்லது வாயுக்கள் செல்வதற்கான திறப்பு இருக்கும். இதனைக் கால் பகுதியளவு திருப்புவதன் மூலம் ஒரதர் திறக்கப்படுகிறது அல்லது மூடப்படுகிறது cockle : மடிப்பு : புத்தகத்தில் அளவுக்கு அதிகமாக ஈரம் ஊடுருவிப் படிந்துவிடும்போது காகிதத்தில் ஏற்படும் மடிப்பு, தாறுமாறான வடிவாக்கத்தையும் இது குறிக்கும் cockling : சுருள்வித்தல் தாறுமாறாக உலர்த்துவதால் காகிதத்தில் உண்டாகும் அலை போன்ற ஒர விளிம்புகள் துணிகளின் மேற்பரப்பில் தாறுமாறாகச் சுருக்கம் உண்டாதல் cockpit : (வானூ.) விமானி அறை : விமானத்தின் உடற்பகுதியில் விமானம் ஒட்டிகளுக்கு உரிய இருக்கைகள் அமைந்துள்ள அறை இந்த இருக்கைகள் முழுவதுமாகக் கொண்ட அறையைச் சிற்றறை என்பர் cockpit cowling : (வானூ.) விமானி அறை மேல் மூடி : விமானி அறையைச் சுற்றியுள்ள உலோகத்தாலான அல்லது ஒட்டுப் பலகையிலான மேல் மூடி cocobolo : (மர.) கோக்கோ போலோ : மத்திய அமெரிக்காவிலுள்ள செம்மரம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம். இதன் வெட்டுமரம் செந்நிறமாக கரும்பட்டைகளுடன் இருக்கும். இது மிகவும் கடினமானது; எண்ணெய்ப் பிசுக்குடையது. இது சுழற்சியாட்டப் பந்துகள் செய்ய கத்தி கைப்பிடிகள் செய்யவும் பயன்படுகிறது coconut oil : (வேதி.) தேங்காய் எண்ணெய் : தேங்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய், இது கடின நீர் சோப்புகள் செய்யப் பயன்படுகிறது code : விதிமுறை : வேலைப்பாடுகளிலும், பயிற்சி முறைகளிலும் முறையான தரநிலையைப் பேணுவதற்காக வகுக்கப்பட்டுள்ள விதி முறைகளின் தொகுப்பு எடுத்துக் காட்டு: கட்டிட விதிமுறை code beacon : (வானூ.) வழிகாட்டி ஒளி : குறிப்பிட்ட அடையாளக் குறிகளுட்ன் கூடிய விமானத்திற்கு விழிகாட்டுவதற்கான வழிகாட்டும் ஒளி விளக்குகள் coefficient : (கணி.) குணகம் : கணிதத்தில் பெருக்கும் எண்ணாக பயன்படும் ஒரு முன்னடை எண் இயற்பியலில் ஒரு பொருளின் தரநிலையைக் குறிக்கும் எண் coefficient of expansion : (பொறி.) விரிவாக்கக் குணகம் : ஒரு பொருள் ஒரு பாதை வெப்பத்திற்கு எவ்வளவு நீளத்திற்கு விரிவடைகிறதோ அந்த அளவைக் குறிக்கும் காரணி coefficient of friction : உராய்வுக் குணகம் : ஒரு பொருளை ஒரு பரப்பிலிருந்து மற்றொரு பரப்பிற்கு நகர்த்துவதற்குக்கிடை நிலையில் பயன்படுத்தப்படவேண்டிய விசைக்குப் அந்தப் பொரு ளின் எடைக்குமிடையிலான விகிதம் — circular saw
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bz24kr9a/

தமிழ்
“வட்ட ரம்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bz24kr9a/
APA
Oliyon Research. (2026). வட்ட ரம்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bz24kr9a/
MLA
"வட்ட ரம்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bz24kr9a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment