கால்

kāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாந்தர்கள் உட்பட விலங்குகளின் ஓர் உடல் உறுப்பு. இது தரையில் ஊன்றி நடக்கவோ, நகரவோ பயன்படுவது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
2.
ஒன்றை ஈடாகப் பங்கிட்ட நான்கில் ஒரு பங்கு - (அரையில் பாதி) - \frac{1}{4};இந்தக் கால் என்னும் கீழ்வாய் எண்ணைக் குறிக்கும் "வ" என்னும் எண்ணெழுத்தின் பெயர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
3.
காற்று (கால்-> காற்று)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
4.
நாற்காலி, முக்காலி போன்ற இருக்கைகளைத் தாங்கி நிற்கும் பகுதி; கருவிகள் ஓரிடத்தில் ஊன்றி நிற்கப் பயன்படும் சற்று நீண்ட பகுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
5.
காடு, கான், கானகம், அடவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
6.
பிறப்பிடம், தோன்றும் இடம் (எ.கா. கால்கொள்ளுதல்), தோற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
7.
வமிசம் (குடும்பக்கிளை வலை), இனமுறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
8.
கருப்பு நிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
9.
இருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
10.
வினையெச்ச விகுதி (இலக்கணச்சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
11.
ஏழனுருபு (இலக்கணச்சொல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
12.
உருளை, சக்கரம், ஆழி (எ.கா. தேர்க்கால், வண்டிக்கால்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
13.
வண்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
14.
முளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
15.
பூந்தாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
16.
மரக்கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
17.
அடிப்பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
18.
காலம் (நேரம்); பொழுது (காலைப்பொழுது)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
19.
குறுந்தறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
20.
வழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
21.
மரக்கன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
22.
மகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
23.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
24.
வாய்க்கால் நீர்க்கால் (பாசனக் கால்வாய்); (குருதிக்கால்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
25.
எழுத்தின் சாரியை (ஒரு பகுதி) (எ.கா. ஆகார உயிர்மெய்யின் துணை எழுத்து)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
26.
வாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
27.
காம்பு (இலை, பூ முதலியன)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
28.
தடவை (முறை) (இருகால் = இருமுறை, இரண்டு த்டவை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
29.
கழல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
30.
சரண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்)
31.
அளவு, முயற்சி, கிரணம், இடம், காலன், கால் பங்கு, தூண், தேர்ச்சக்கரம், துறை, நடை, இயமன், முனை, வாய்க்கால், வம்சம், கைப்பிடி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 128)
32.
பொழுது, (குறள் 36, 248, 379, 674, 859 1064, 1104); உருளை, (குறள் 496); சேற்று நிலத்தில் காலடி அழுந்த, (குறள் 500); ஆராய்ந்து பார்த்தால், {710); சேரும் பொழுது, (குறள் 733); கழுவாத கால்கள், (குறள் 840); அடிமரம், (குறள் 430, 930, 1030); முளை, (குறள் 959); காம்பு நீக்காமல், (குறள் 1115); பிரி யும் பொழுது, (குறள் 1166): வாராத பொழுது, (குறள் 1179); தூங்கும் போது, விழிக்கும்போது. (குறள் 1218).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 114)
33.
புறத்துறுப்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)
34.
கணினி வலுப்படுத்திய கற்றல் என்று பொருள்படும் Computer Augmented Learning என்பதன் குறும்பெயர் — CAL
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 204)
35.
நடைமுறைச் செயலிலுள்ள ஒட்டு — leg
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 143)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bsbcatz9/

தமிழ்
“கால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsbcatz9/
APA
Oliyon Research. (2026). கால். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/bsbcatz9/
MLA
"கால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bsbcatz9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment