சி.பீ.யூ இடைமாற்றகம்

ci.pī.yū iṭaimāṟṟakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சிபியூவுக்குத் தேவையான அதாவது சி.பீ.யூ அடுத்துக் கையாளவிருக்கும் தகவல் மற்றும் நிறைவேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக்கும். முதன்மை நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி.பீ.யூ இடைமாற்று நினைவகம் அதிக வேகமுடையது. இதிலுள்ள தகவல், தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சி.பீ.யூவுக்கு அடுத்துத் தேவைப்படும் தகவல் எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடைமாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடைமாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும் — CPU cache
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqcgq62j/

தமிழ்
“சி.பீ.யூ இடைமாற்றகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqcgq62j/
APA
Oliyon Research. (2026). சி.பீ.யூ இடைமாற்றகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqcgq62j/
MLA
"சி.பீ.யூ இடைமாற்றகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqcgq62j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment