இது சோளப் பட்சி என்றும் குறிப்பிடப்படும். இது மைனா இனத்தைச் சேர்ந்தது. வயல்களில் சோளம், கம்புப் பயிர்கள் முற்றும் காலத்தில் ஆயிரக் கணக்கான குருவிகள் கூட்டமாக வட நாடுகளிலிருந்து தெற்கே வலசை வருகின்றன. மைனா அளவுள்ள இதன் தலையும், கொண்டையும் மிகவும் கறுத்தும், உடல் சிவப்பு நிறத்திலும் உள்ளன. விளைந்த தானியத்திற்கு, இவை ஓரளவு அழிவை ஏற்படுத்தினாலும், பயிர்களின் பெரும் எதிரியான வெட்டுக் கிளியைப் பிடித்துத் தின்று, உழவர்களுக்கு நன்மையும் செய்கின்றன.