செல்கள் இனப் பெருக்கம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். ஒரு வயது வந்த மனிதனிடம் 1014 செல்கள் இருக்கக் கூடும். இவை யாவும், ஒரு கருவுற்ற அண்டத்திலிருந்து தோன்றிய செல்களாகும். முழு வளர்ச்சியைப் பெற்றுள்ள ஒரு வயது வந்த மனிதனை விடச் செல்களின் பெருக்கம் வியக்கத் தக்கதாக உள்ளது. ஒரு மனிதனில் 2.5 X 1013 குருதிச் சிவப்பு அணுக்கள் இருக்கின்றன. இவை ஏறக் குறைய, 107 நொடி முதல் 120 நாள்கள் வரை உயிரோடு இருக்கின்றன. குருதி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பதற்கு, ஒரு நொடிக்கு ஏறக் குறைய 2.5 மில்லியன் புதிய செல்கள் தேவைப்படுகின்றன. வயது முதிர்ந்த திசுக்களில் ஏற்படும் இழப்பினை ஈடு செய்வதற்கு ஏற்ப, இச்செல்களில் இனப் பெருக்கம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கும். ஒரு வளரும் செல்லில், செல்லின் சுழற்சி முக்கியமாக இரு நிலைகளில் நடை பெறுகிறது. ஒரு நிலையை இடை நிலை (interphase) என்றும், மற்றொன்றைப் பிரிவு நிலை (division) என்றும் கூறலாம். செல்களின் வாழ்நாளில் பெரும் பகுதி இடைக் காலத்திற்கென்றே செலவழிக்கப் படுகிறது. அக்காலத்தில், உயிர் சேகரிப்புச் செயல்கள் விரைவு படுத்தப் பட்டு, குறிப்பாகக் குரோமோசோமின் எண்ணிக்கையும் இரு மடங்காக்கப் பட்டுச் செல் அளவில் இரு மடங்காகப் பெருகுகிறது. முதலில் அணு மூலக் கூறு மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களின் முடிவே செல் பிரிகையாக (cell division) நுண்ணோக்கியில் காட்சியளிக்கிறது. இடைநிலையின் படிகள் (stages of interphase). குறிப்பிட்ட இடை நிலைக் காலத்தில் தயாரிப்பு அல்லது 'த’ காலத்தில் டி.என்.ஏ தயாரிக்கப் படுகின்றது. அதற்கு முன்னரும், பின்னரும் இடை நிலையின் இரண்டு வெற்றுக் காலங்கள் (வெ 1, வெ 2) உள்ளன. இவ்வெற்றுக் காலத்தில் DNA தயாரிப்பு நடை பெறுவதில்லை. ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வுகளின் அடிப்படையில், உயிரணு சுழற்சியினை வெற்றுக் காலம், தயாரிப்பு, வெற்றுக் காலம், மறைமுகப் பிரிவு (mitosis) என்று நான்கு நிலைகளாகப் பகுத்துள்ளனர். வெ 1–நிலையானது. மறைமுகப் பிரிவு நிலையின் முடிவிற்கும், DNA தயாரிப்பின் தொடக்க நிலைக்கும், இடைப்பட்ட காலத்தைக் குறிக்கின்றது. ‘த’ காலத்தில் DNA தயாரிக்கப் படுகிறது. வெ 2–காலம் DNA தயாரிப்பின் முடிவு நேரத்திற்கும், மறைமுகப் பிரிவின் தொடக்க காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தைக் குறிக்கின்றது. தொடக்கத்தில், இரட்டை எண் (Diploid cell) குரோமோசோம் களைக் கொண்டிருந்த செல், த 2–காலத்தில், இரு மடங்கு (4c-tetraploid) DNAஐத் தன்னுள் கொண்டுள்ளது. மறைமுகப் பிரிவுக்குப் பின்னர், சேய்ச் செல்கள் (daughter cells) மீண்டும் வெ 1. காலத்தைத் தொடங்குகின்றன; பின்னர், முன்பு செல்லில் இருந்த DNA அளவுக்குச் சமமான DNA ஐக் கொண்டுள்ளன. செல் சுழற்சி நடை பெறும் காலம் செல்லுக்குச் செல் பெருமளவு மாறு படுகிறது. ஒரு பாலூட்டியின் செல்லை வளர்ப்பு முறையில் (culture) வளர்க்கும் போது, ஒரு தலைமுறைக்கான மொத்த நேரம் 16 மணி ஆகும். அதைத் தயாரிப்பு ஏழு மணிகள், வெற்றுக் காலம் 1–ஐந்து மணிகள், வெற்றுக் காலம் 2–மூன்று மணிகள், மறைமுகப் பிரிவு ஒரு மணி எனப் பகுக்கலாம். பொதுவாகத் தயாரிப்பு வெற்றுக் காலம் 2, மேலும் மறைமுகப் பிரிவு ஆகியவை ஒரே இனத்தைச் சார்ந்த செல்களில் ஒத்த நேரத்திலேயே நடை பெறுகின்றன. வெற்றுக் காலம்–1தான் அதன் கால நீளத்தில் பெரிதும் வேறு படுகிறது. செல்லின் உடல் செயலியல் நிலைமைகளைப் பொறுத்து, வெற்று காலம்–1 பல நாள்கள் நீடிக்கலாம். இயல்பாகப் பிளவு படாத (நரம்புச் செல்கள் அல்லது எலும்புகளுடன் சேர்ந்துள்ள தசைகள்) அல்லது மிக அரிதாகப் பிளவு படும் (எ-டு: சுழலும் நிண நீர்ச் செல்கள்) செல்களில் வெற்று காலம்–1 இருப்பதற்குச் சமமாக DNA இருக்கும். செல்லின் வெ–1 காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்திச் செல் சுழற்சியின் நேரத்தைக் கட்டுப் படுத்தலாம். கட்டுப் படுத்தப் பட்ட செல் வெ–1 நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது. வெ–0 நிலையில் செல் சுழற்சியினின்றும் பின் வாங்கிய தாகக் கருதலாம். செல்லில் நிலைமைகள் மாறி, அதன் வளர்ச்சி தொடங்கிய இடை நிலையில் குரோமோசோம்கள் சுருங்குவதனின்றும் மாறுபட்டு, நுண்ணோக்கியில் கண்ணுக்குத் தெரியாத உருவத்தை அடைகின்றன. ஓர் ஆய்வின் மூலம், இடை நிலையின் மூன்று நிலைகளிலும், குரோமோசோம்களின் சுருங்கிய உருவத்தைக் காணலாம். மறைமுகப் பிரிவுச் செல்களை இடை நிலைச் செல்களுடன் இணைத்தால், மறைமுகப் பிரிவுச் செல்கள் இடை நிலைச் செல்களின் நியூக்ளியசில் உள்ள குரோமோசோம்களை முன்னதாகவே உறையச் செய்யத் தூண்டுகின்றன. முன்னதாகவே சுருங்கிய வெ–1 நியூக்ளியசில் உள்ள குரோமோசோமில் ஒரு குரோமோடிட்டும். வெற்று–2 நியூக்ளியசில் இரண்டு குரோமோடிட்களும் உள்ளன. இதிலிருந்து, வெற்று–1 இடை நிலையில் DNA பதிப்புக்கு (replication) முன்னர் உள்ள நிலையையும், வெற்று–2 இடை நிலையின் DNAஇன் பதிப்புக்குப் பின்னர், உள்ள நிலையையும் காட்டுவதை அறியலாம். செல் சுழற்சியில் ஏற்படும் உயிர் வேதியியல் செயல்பாடுகள். மறைமுகப் பிரிவு நடைபெறும் போது, RNA தயாரிப்பு நிறுத்தி வைக்கப் படுகிறது. பின் முதல் (late prophase) நிலையில், RNA தயாரிப்பின் அளவு விரைவாகக் குறைந்து விடுகிறது. நடு நிலை (metaphase), முன்–கடை நிலை (anaphase) ஆகிய நிலைகளில், RNA தயாரிப்பு முற்றிலும் நின்று விடுகிறது. குரோமேட்டின் மிகுதியாகச் சுருங்கி இருக்கும் போது, அதை அச்சாகப் பார்த்துப் படியெடுத்து மாற்றக் கூடிய நொதிகள் அதை அணுக முடியாமையால், இந்நிலைகளில் தயாரிப்பு நடைபெறுவதில்லை. DNA தயாரிப்பு ‘த’ நிலையில்தான் நடை பெறுகிறது. இக்காலத்தில் பதிப்பு படிப் படியாக விரைவு படுத்தப் படுகிறது. அனைத்துச் செல்களிலும் குரோமோசோமில் மிகுதியாகச் சுருங்கிய மாறுபட்ட பகுதிகள், தயாரிப்பின் பின் பகுதியில் பதிப்புச் செய்கின்றன. வெ–1 நிலையில் முக்கியமான கட்டுப்பாட்டுச் செயல்கள் நடை பெறுகின்றன. அந்நிலையில், செல் மீண்டும் புதிய சுழற்சியைத் தொடக்க வேண்டும். அல்லது, வெ–0 நிலையில் சுழற்சி நடை பெற வேண்டும். ஒரு முறை செல் வெ–0 நிலையைக் கடந்து விட்டதெனில், அது புதிய சுழற்சி முடிவு பெறும் வரை தொடர்ந்து நடை பெறுகிறது. —கி. மகிபதி