செறிப்பானை (condenser) வெப்பப் பரிமாற்றி எனவும் கூறலாம். செறிப்பானில், வரிசையான இணை குழாய்களைக் கொண்ட ஒரு கலம் இருக்கும். இக்- குழாய்களில் நீரோட்டம் காணப் படும். சீராக இடைவெளி விடப் பட்ட துணைத் தகடுகள் இக்குழாய்களை நிலை நிறுத்த உதவும். குழாய்த் தகட்டின் ஒவ்வொரு முனையிலும், இக்குழாய்கள் பற்றுக் கோடாக வைக்கப் பட்டிருக்கும். செறிப்பானின் மேல் கலத்திற்குள் இருக்கும் நீராவி இக்குழாய்களின் வெளியே சுருக்கப் படும். செறிப்பானின் கீழே இருக்கும் சுடு கிணறு (hotwell) என்னும் பெரிய தேக்கக் கிண்ணத்தில் நீராவி பெறப் படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செறிப்பானில் குளிர்ந்த நீரோட்டத்தின் அளவு, உள் மற்றும் வெளி வெப்பம், நீராவி வெப்பம் இயல்பாற்றல், குழாய்ப் பொருள், வடிவளவு ஆகியவை வழியலகுகளாக (parameters) இருக்கும். இவையனைத்தும் கணக்கிடப் பட்டவுடன், பரப்பளவு, வெப்பத்தை மாற்றத் தேவையான குழாய்களின் எண்ணிக்கை ஆகியவை பின் வரும் சமன்பாட்டிலிருந்து கணக்கிடப் படும். q = UA\theta_m இதில் q என்பது வெப்ப மாற்றி மதிப்பீட்டைக் குறிக்கும். U என்பது வெப்ப மாற்றிக் குணகத்தைக் குறிக்கும். θm என்பது சராசரி வெப்ப வேறுபாட்டு மடக்கையைக் குறிக்கும், இது °F இல் இருக்கும். A என்பது குழாயின் பரப்பளவைக் குறிக்கும். நீராவியைக் குளிர்விக்கப் பயன் படுத்தும் நீரின் தன்மை, கலத்தினுள் இருக்கும் செறி பொருள் (condensate), நீராவியின் வேதியியல்பு ஆகியவற்றைக் கொண்டே ஒரு செறிப்பான் தேர்ந்தெடுக்கப் படும். பொதுவாக, நன்னீருக்கு, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஆழ் குழாய்கள் (admiralty tubes) பயன் படும். இக்குழாய்கள், செறிப்பான் குழாய்த் தகட்டினுள் உருட்டப் படும். எனினும், அணு ஆற்றல் பயன்களில் குளிர்ந்த நீரின் கசிவு நிகழ்வதைக் குறைக்க, குழாய்த் தகட்டினுள் குழாய்களுக்குப் பற்று வைக்கப் படும். சிறிது உப்பான அல்லது கடல் நீர்ப் பயன்களுக்கும் குழாய்த் தகடுகளில் உருட்டும் (roll) இணைப்புகளுக்கும் தற்போது டைட்டேனியம் பயன் படுகிறது. குழாய் தாங்கும் தொலைவு, குழாய் வேறுபடும் முறை, நீர்–சம்மட்டி முறை, சுடு கிணற்றில் குளிர்ந்த நீரின் கசிவு, குழாய்த் தகடுகளின் இறுக்கம், குழாய்களில் நீராவியின் தாக்குதல் போன்றவை பெரிய செறிப்பான்களைத் தயாரிக்கும் போது, உண்டாகும் சிக்கல்களாகும். முதலீட்டிற்கும், இயக்கச் செலவுக்கும் இடையே உள்ள தொடர்பின் உயர் மதிப்பீட்டை வைத்தே செறிப்பானின் இறுதித் தேர்வு நடை பெறும். செறிப்பானைப் பயன் படுத்தும் ஒரு குளிர்ந்த நீர்ச் சுற்று வழியைப் படத்தில் காணலாம். —இரா. இந்து நூலோதி. Donald D. Fink, H. Wayne Beaty, Standard Hand Book for Electrical Engineers, Eleventh Edition, McGraw-Hill Book Company, New York, 1978.