ரெக்ஸ்
reks
பொருள்கள் · Senses
1.
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/2 பதிப்பு 2. 0-லும் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிரலாக்க மொழி. இம்மொழி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்குகிறது. இயக்கமுறைமைக் கட்டளைகளையும் செயல்படுத்தும்
— RΕΧΧ
2.
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக்கணினிகள்(Mainframes) மற்றும் ஒஎஸ்/2 பதிப்பு 2.0-லும் பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு நிரலாக்க மொழி. இம்மொழி பயன்பாட்டுத் தொகுப்புகளை இயக்குகிறது. இயக்கமுறைமைக் கட்டளைகளையும் செயல்படுத்தும். RFC :ஆர்எஃப்சி : மதிப்புரைக்கான கோரிக்கை எனப் பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தர வரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் - இவற்றில் ஒன்றுபற்றி பிற பார்வையாளர்கள், ஆர்வலர்களின் கருத்துரைகளைக் கேட்டு இணையத்தில் வெளியிடப்படும் ஒர் ஆவணம். ஐஏபி-யின் கட்டுப்பாட்டில் இவை வெளியிடப்படுகின்றன. விவாதங்களுக்குப் பிறகு இவையே இறுதித் தர வரையறையாக ஆகிவிடுகின்றன. இன்டர்நிக் போன்றவற்றின் அமைப்புகளிடமிருந்து ஏராளமான ஆர்எஃப்சிக்களை பெற முடியும். RFI: ஆர்எஃப்ஐ : வானலை அலை வரிசை இடையூறு எனப் பொருள்படும் Radio Frequency Interference என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வானொலி, தொலைக்காட்சி போன்ற மின்னணுச் சுற்றுகளில், கணினி போன்ற பிற மின் சுற்றுகளில் உருவாகும் மின்காந்த கதிர்வீச்சினால் ஏற்படும் இரைச்சலைக் குறிக்கிறது. RF shielding : ஆர்எஃப் காப்புறை : வானலை வரிசை ஊடுருவாமல் தடுப்பதற்குப் பயன்படும் கட்டமைப்பு. பெரும்பாலும் உலோகத் தகடு அல்லது உலோக மேற்பூச்சினால் அமைந்திருக்கும். RGB monitor : ஆர்ஜிபி திரையகம் : சிவப்பு,பச்சை,நீலம் ஆகிய அடிப்படை நிறங்களுக்கான சமிக்கைகளை தனித்தனித் தடங்களில் பெறுகின்ற ஒரு வண்ணத் திரையகம். மேற்கண்ட மூன்று நிறங்களுக்கான நிலை அளவுகளை ஒற்றைத் தடத்தில் பெறுகின்றது. கலப்பு இனத் திரையகங்களைவிடப் பொதுவாக தெளிவான, தூய படிமங்களை உருவாக்கும் திறன்படைத்தவை. right arrow :வலது அம்புக்குறி . right shift : வல நகர்வு;வலது பெயர்வு. ripple sort : அதிர்வலை வரிசையாக்கம். RISC : ரிஸ்க் : சுருக்க ஆணைத்தொகுதி கணிப்பணி என்று பொருள் படும் Reduced Instruction Set Computing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எளிய ஆணைகளின் அடிப்படையில் அதி வேகமாய் திறன்மிக்கதாய் செயல்படக்கூடிய ஒரு நுண்செயலி வடிவமைப்பு. ஒவ்வோர் ஆணையையும் ஒரு கடிகாரச் சுழற்சியிலேயே அதிவேகமாய் செயல்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது ரிஸ்க் கட்டுமானம். மிக எளிய ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் நுண்செயலிகளைக் காட்டிலும் சிஸ்க் (CISCComplex Instruction Set Computing) நுண்செயலிகள் மிகவேகமாய் நிறைவேற்றுகின்றன. ஆனால்,மிகவும் சிக்கலான ஆணைகளைப் பொறுத்தமட்டில் ரிஸ்க் செயலிகளைவிட வேகத்தில் குறைந்தவையே காரணம், சிஸ்க் செயலிகள் சிக்கலான செயல்பாட்டிற்கும் தனித்தனி ஆணைகளைக் கொண்டுள்ளன. ரிஸ்க் செயலிகள் பல ஆணைகளின் தொகுப்பாக அவற்றை நிறைவேற்ற வேண்டியுள்ளது. சன் மைக்ரோ சிஸ்டமஸ் நிறுவனத்தில் ஸ்பார்க் செயலி,மோட்டோரோலாவின் 88,000 இன்டெல்லின் ஐ 860, ஆப்பிள், ஐபிஎம் மோட்டோரோலா ஆகியவற்றின் பவர்பீசி, ரிஸ்க் வகையைச் சேர்ந்தவை. rlogin : ஆர்லாகின் : ஒரு பிணையக் கணினியில் நுழைவதற்குப் பயன்படும் ஒரு நெறிமுறை. இம்முறையில் பயனாளரின் புகுபதிகைப் பெயரை பயனாளரின் கணினி தானாகவே தந்துவிடும். .ro : ஆர்ஓ : ஒர் இணையதள முகவரி ருமேனியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். robopost : பொறிவழி வெளியீடு : ஒரு தானியங்கு நிரல் மூலமாக, செய்திக் குழுக்களுக்குக் கட்டுரைகள் அனுப்பிவைத்தல். robot : எந்திரன்:மனிதர்களின் மேற்பார்வையின்றி, சுற்றுச்சூழலை உணர்ந்து, உள்ளீட்டுக்கேற்றவாறு சுற்றுச் சூழலை ஓரளவுக்கு துண்ணறிவோடு மாற்றும் திறன் பெற்ற ஒரு பொறி. பெரும்பாலும், மனித அசைவுகளையொத்த செயல்பாடுடைய எந்திரன்களே வடிவமைக்கப்படுகின்றன. ஆனால் உருவத்தில் அவை மனிதர்களைப் போல படைக்கப்படுவதில்லை. வாகனம் மற்றும் கணினி உற்பத்தி சாலைகளில் எந்திரன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. robust : எதிர்கொள்திறன்; தாக்குப் பிடிக்கும் திறன் : எதிர்பாராத சூழ்நிலைகளிலும் இயங்கக்கூடிய அல்லது இயக்கத்தைத் தொடரக்கூடிய திறன். ROFL : ஆர்ஓஎஃப்எல்: ரோஃபல் : விழுந்து விழுந்து சிரித்தல் எனப் பொருள்படும் Rolling on the floor, laughing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பெரும்பாலும் செய்திக் குழுக்களில் மற்றும் நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், ஒரு நகைச்சுவைத் துணுக்கை அல்லது நகைப்பேற்படுத்தும் சூழ் நிலையை ரசித்துப் பாராட்டுவதைத் தெரிவிக்கப் பயன்படும் சொல். role-playing game : பாத்திரமேற்று நடிக்கும் விளையாட்டு : நடப்பு வாழ்க்கையில் சந்திக்கும் பாத்திரங்களை ஏற்று ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நடித்துக் காட்டுவது. பெரும்பாலும் மேலாண்மைப் பயிற்சியகங்களில் பயிற்சியாளர்களுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுவதுண்டு. ஒர் அதிகாரியிடம் புகார் தர வருகின்ற வாடிக்கையாளர் ஒருவர் எப்படி நடந்து கொள்வார், அதிகாரி அவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பயிற்சியாளர்கள் நடித்துக் காட்ட வேண்டும். மேலாண்மைப் பதவிகளை வகிக்கப் போகிறவர்கள் நடப்பு வாழ்வில் சந்திக்கவிருக்கும் சவால்களை எதிர் கொள்வதற்கு இத்தகைய பயிற்சிகள் உதவுகின்றன. roman : ரோமன் : ஒருவகை எழுத்து வடிவம். சாய்ந்த வடிவமாக இல்லாமல் நிமிர்ந்து நிற்கும் வடிவம் கொண்ட எழுத்துரு. ROM Basic : ரோம் பேசிக் ;ரோம்(ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்துவைக்கப்பட்ட பேசிக் மொழி ஆணைமாற்றி(Interpreter)யைக் குறிக்கும். கணியை இயக்கிய வுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம். வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer)களில் ரோம் பேசிக் இணைக்கப்பட்டிருந்தது. ROM card :ரோம் அட்டை : அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தகவல்கள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை, ரோம் அட்டை, ஒரு பற்று அட்டை (Credit card)யின் அளவில் ஆனால் அதை விடப் பலமடங்கு தடிமனாக இருக்கும். ஒருங்கிணைப்பு மின்சுற்று அட்டைகளில் நேரடியாகத் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். ROM cartridge : ரோம் பொதியுரை : ரோம் அட்டை (ROM card) ஒரு பிளாஸ்டிக் பொதியுறையில் இடப்பட்டு, இணைப்பு முனைகள் ஒரு விளிம்பில் வெளித்தெரிந்து கொண்டிருக்கும். இதனை அச்சுப்பொறி, கணினி, விளையாட்டுக் கருவி அல்லது பிற சாதனத்தில் எளிதாகப் பொருத்த முடியும். தொலைக் காட்சிப் பெட்டியுடன் இணைத்து விளையாடக் கூடிய பெரும்பாலான ஒளிக்காட்சி விளையாட்டுகள் (Video games) இதுபோன்ற ரோம் பொதியுறைகளில் கிடைக்கின்றன. ROM emulator :ரோம் மாதிரி :ரோம் போலிகை : ஒர் இலக்குக் கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தகவலை எழுதும். இலக்குக் கணினி ரோம் சிப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக இந்த ரேம் சிப்புகளிலுள்ள தகவலைப் படித்துக் கொள்ளும். ரோமில் இருத்தி வைக்கும் நிரல்களைச் சரிபார்க்க (debug), அதிக செலவும் தயாரிப்பு காலமும் ஆகும்.ரேம் சிப்புகள் இல்லாமலேயே இந்தவகை விலை குறைவான ரேம் சிப்புகளைக் கொண்டு செய்து முடிக்க முடியும். ஈப்ரோம் (EPROM) சிப்புகளைக் காட்டிலும் ரோம் போலிகை விலை அதிகம் எனினும், ஈப்ரோமை விட மிகவிரைவாக உள்ளடக்கத்தை மாற்ற முடியும் என்பதால் இந்த வகை ரேம் சிப்புகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. root account : வேர்க் கணக்கு:மூலக்கணக்கு :முதன்மைக் கணக்கு : யூனிக்ஸ் இயக்க முறைமையில் கணினியின் செயல்பாடுகளை முழுமையாகக் கட்டுப்பாடு செய் கின்ற பயனாளரின்கணக்கு முறைமை நிர்வாகி, கணினி அமைப்பின் பராமரிப்புக்காக இந்தக் கணக்கினைத் தான் பயன்படுத்திக் கொள்கிறார். root directory :மூலக்கோப்பகம்; வேர்க்கோப்பகம்,முதன்மைக் கோப்பகம்,தலைமைக் கோப்பகம் : வட்டு அடிப்படையிலான படிநிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள்கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் அல்லது உள்-கோப்பகங்களைக் கொண்டிருக்கலாம்.(எ-டு) டாஸ் இயக்க முறைமையில் பின்சாய்வுக் கோடு (\) மூலக் கோப்பகத்தைக் குறிக்கிறது. அதன்கீழ்தான் பிற கோப் பகங்களும், உள் கோப்பகங்களும், கோப்புகளும் இடம்பெறுகின்றன. root name : முதன்மைப் பெயர் : எம்எஸ் டாஸ், விண்டோஸ் போன்ற இயக்க முறைமையில் ஒரு கோப்பின் பெயர் இருபகுதிகளைக் கொண்டது. முதல்பகுதி முதன்மைப் பெயர் என்றும், அடுத்த பகுதி நீட்டிப்பு (Extension) என்றும் அழைக்கப்படுகிறது. நீட்டிப்பு பெரும்பாலும் அக்கோப்பின் வகையைக் குறிப்பதாக அமையும் . டாஸ் மற்றும் விண்டோஸ் 3.x-ல் முதன்மைப்பெயர் அதிக அளவாக எட்டு எழுத்துகளையே கொண்டிருக்கும். வகைப்பெயர் அதிக அளவாக மூன்றெழுத்துகள். இரண்டுக்கும் இடையே ஒரு புள்ளி இடம்பெறும். விண்டோஸ் 95/98/என்டி மற்றும் பிறகு வந்தவற்றில் கோப்பின் பெயர் அதிக அளவாக 255 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம். ROT13 encryption : ராட் 13 மறையாக்கம் : ஒர் எளிய தகவல் மறையாக்க முறை. தகவலிலுள்ள ஒவ்வொரு ஆங்கில எழுத்தும், அதற்கடுத்து 13 எழுத்துகளும் பிறகுவரும் எழுத்தால் பதிலீடு செய்யப்பட்டிருக்கும். (எ-டு) A என்னும் எழுத்துக்குப் பதில் N என்னும் எழுத்து பதிலீடு செய்யப்படும். மறுமுனையில் N என்னும் எழுத்து A என மாற்றப்படும். Z என்னும் எழுத்து M-ஆக மாற்றப்படும். ராட்13 மறையாக்கம், தகவலைப் பிறர் படிக்கக் கூடாது என்பதற்காகச் செய்யப்படுவதில்லை. செய்திக் குழுக்களில் பயனாளர் படிக்க விரும்பாத ஆபாசத் தகவல்களை குறியாக்கம் செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. சில செய்தி படிப்பு மென்பொருள்களில் ஒரு விசையை அழுத்தியவுடனே மறையாக்கம் செய்யவும், மறைவிலக்கம் செய்யவும் வசதி உண்டு. rotate : சுழற்று; திருகு; சுழல்நகர்வு : 1.திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப்படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில்(register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம் ஒரிடம் நகரச் செய்தல். இத்தகைய நகர்வினால் ஒரு முனையில் இடமின்றி நகர்த்தப் டும் இறுதி துண்மி(பிட்) எதிர் முனையில் வெற்றிடமாகும் இடத்தில் ஒட்டிக் கொள்ளும்.
— REXX
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/auv5gwy8/
தமிழ்“ரெக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auv5gwy8/APA
Oliyon Research. (2026). ரெக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/auv5gwy8/MLA
"ரெக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/auv5gwy8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment