இழைச் சிணுக்கும், முறுக்கும் (திரிப்பும்) அளக்கப் படுதல் நூல் அளவைகளில் (yarn dimensions) முதன்மை பெறுகின்றன. நீட்டவாக்கு அடர்த்தி அல்லது நூல் எண் (linear density or yarn number). நூலின் இழைச் சிணுக்கு என்பது நூலின் நுண்மையைக் குறிக்கும் எண் மதிப்பாகும். ஒரு கம்பியின் நுண்மையைக் குறிப்பதற்கு இதன் அளவி (gauge) மதிப்புகள் உதவுகின்றன. நியம கம்பி அளவி அட்டவணையின் படி, அளவி எண் 10 கொண்ட கம்பியின் குறுக்களவு 0.128 அங்குலமாகும். மாறாக, குறுக்களவு துல்லியமாக அளந்தறியப்பட்ட கம்பியின் அளவி எண்ணை, அட்டவணையிலிருந்து பெறலாம்; ஆனால், நூலின் குறுக்களவைக் கண்டறிதல் கடினமாகும். நூற்பு நூல்கள் தோராய வட்டமான குறுக்களவைக் கொண்டிருப்பதுடன், தடிமனில் ஒழுங்கற்ற நிலைமை நிலவுகிறது. முறுக்கேற்றம் குறைவாக அமையப் பெற்ற நீளிழை நூல்கள் தட்டை நூல்கள் (Flat yarns) எனப் படுகின்றன. அவை பிற திண்மப் பொருள்களால் அழுத்தப் படுகையில், தட்டையாகி விடுகின்றன. பெரும்பாலான நூல்கள் மென்மையாகவும், எளிதில் அழுத்தப்பட வல்லவையாகவும் உள்ளமையால், நுண்ணளவை அளவியால் (micrometer) அளக்க இயலாது. இதற்கென ஓர் ஒளியியல் முறை பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஒரு திரையில் நூலின் நிழலுருவம் வீழ்த்தப் படுகிறது. இத்திரை அங்குலத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கை அடிப்படையாகக் கொண்ட அளவீடு இருக்கும். இவ்வாய்வின் நோக்கம் நூலின் சிணுக்கு எண்ணை அறிவதன்று; ஏறத் தாழ 200 அளவைகளின் மொத்த பாதிப்பிலிருந்து, நூலின் ஒழுங்கின்மையின் அளவை அறிவதே நோக்கமாகும். நூலின் குறுக்குப் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்ட சிணுக்கு அளவை முறை கயிறு தயாரிக்கும் தொழிலில் கையாளப் படுகிறது. 3 அங்குல சுற்றளவு கொண்ட முப்புரி (3-strand) கயிற்றின் ஒரு புரியைத் தயாரிப்பதற்குத் தேவைப் படும் நூல்களின் எண்ணிக்கை நூலின் சிணுக்கு எண்ணாகக் (Yarn count) கருதப் படுகிறது. நூலின் சிணுக்கு எண் எனப் படுவது அலகு நீளத்திற்கான நிறை அல்லது அலகு நிறைக்கான நீளம் ஆகும். நீளத்தையும், நிறையையும் குறிப்பிடுவதற்குப் பல்வேறு அலகுகள் வழங்கியிருந்தமையால், சிணுக்கு எண்ணைக் குறிக்கையில், அலகுகள் தெளிவாகக் குறிப்பிடப் பட வேண்டும். நூல் எண்ணைக் குறிப்பிடுவதற்கு நேரடி மற்றும் மறைமுக முறைகள். அலகு நீளத்திற்கான எடையைக் கண்டு பிடித்தல் நேரடி முறையாகவும், அலகு எடைக்கு நீளத்தைக் கண்டு பிடித்தல் மறைமுக முறையாகவும் கருதப் படுகின்றன. எடுத்துக் காட்டாக, 100 மீ. நீளிழையின் நிறை 1.67 கிராம் எனில், அந்நூலின் டெனியர் கீழ்க் காணுமாறு கணக்கிடப் படுகிறது. டெனியர் அமைப்பில், எடையின் அலகு கிராம், நீளத்தின் அலகு 9000 மீ. 9000 மீட்டரின் நிறை டெனியர் ஆகும். எனவே, இழைச் சிணுக்கு எண் = \frac{1.67 \times 9000}{100} = 150.3 டெனியர் மறைமுக வழி முறையில், N = \frac {L \times w} {l \times W} அட்டவணை 1 : நேரடி முறை மறைமுக முறை இங்கு w = அளவை அமைப்பின் நிறையலகு. ஏனைய எழுத்துகள் முந்தைய கணக்கீட்டிலுள்ள காரணிகளையே குறிக்கின்றன. குஞ்சம் (lea) என்னும் அலகு லினனுக்குப் பயன் படுகிறது. 120 கெஜம் நீளமுள்ள குஞ்சம், 25 கி. எடை கொண்டிருந்தால், அதன் சிணுக்கு எண்ணைக் கீழ்க் காணுமாறு கணக்கிடலாம். இங்கு அலகு நீளம் ஒரு சிட்டமாகும் (840 கெஜ பருத்தி நூல்); எடையின் அலகு பவுண்டாகும். 1 பவுண்டு = 7000 மணிகள் (grains). எனவே, L = 120 கெஜம்; l = 840 கெஜம்; W = பவுண்ட், w = 1 பவுண்ட். N = \frac {120 \times 70} {840 \times 25} = 40S S என்னும் குறியீடு ஒரு மரபு வழக்காகும். பல்வேறு அளவை அமைப்புகளில் அடிப்படையாகப் பயன் படுத்தப் படும் அலகு நீளங்களும், அலகு எடைகளும் அட்டவணை 1இல் தொகுக்கப் பட்டுள்ளன. இவ்வட்டவணையிலுள்ள சில பெயர்கள் வழக்கத்திற்கு மாறாகத் தெரிகின்றன. இதனால், இவை வட்டார வழக்கு என்பது தெளிவாகிறது. இதற்கு முதன்மையான காரணம் துணித் தொழில் உலகின் பல்வேறு பகுதிகளில், சம காலத்தில் வளர்ந்து வந்ததேயாகும். ஒரு பகுதியில் வளர்ந்த துணித் தொழில் அப்பகுதிக்கே ஏற்றதெனக் கருதப்பட்ட அளவை முறையை உருவாக்கியது. ஓர் அளவை முறைக்கும், மற்றொன்றுக்கும் உள்ள தொடர்பு, காரணிகளும், மாறிலிகளும் கொண்ட சமன்பாடுகளாகும். நூல் சிணுக்குச் சீரமைப்பு (Rationalisation). ஓர் அளவை முறையிலிருந்து, மற்றொன்றுக்கு மாற்றுதல் நேரமும், பொருளும் செலவாகும் வழி முறையாகியதால், உலகம் தழுவிய சிணுக்கு அளவை முறையொன்றை உருவாக்கும் முயற்சி பல விவாதங்களுக்கும், மாநாடுகளுக்கும் பிறகு பயனளித்தது. 1956இல் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (International Standards Organisation) கூட்டிய மாநாட்டில், டெக்ஸ் (tex) என்னும் அளவை முறை உருவாக்கப் பட்டது. 1 கி.மீ. நீளமுள்ள நூலின் கிராம் நிறை டெக்ஸ் எனப் படும். இது ஒரு நேரடி அளவை முறையாகும். இவ்வடிப்படை அலகின் விரிவாக்கங்களாக மிக நுண்ணிய நூல்களுக்கும், மறுபுறம் தடித்த முரட்டுக் கயிறுகளுக்கும் இரு வகை அலகுகள் தோற்றுவிக்கப் பட்டன. நுண்ணிய நூல்களுக்கு மில்லி டெக்ஸ் எனவும், முரட்டு நூல்களுக்குக் கிலோ டெக்ஸ் எனவும், அலகுகள் வரையறுக்கப் பட்டுள்ளன. 1 மில்லி டெக்ஸ் = 1 கி.மீ. நூலின் எடை (மி.கிராமில்) 1 கிலோடெக்ஸ் = 1 கி.மீ. நூலின் எடை (மி.கிராமில்) டெக்ஸ் அலகு முழுமையாக நெசவுத் தொழிலில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. எடுத்துக் காட்டாக, பருத்தி நூலின் முறுக்கு கீழக் காணும் சமன்பாட்டின் படி, குறிப்பிடப் படுகிறது. முறுக்குக் காரணி = டெக்ஸ் அமைப்பில் 1 அங்குலத்திற்கான சுற்று என்னும் நிலை, 1 மீட்டருக்கான சுற்று என மாற்றம் பெறும். மேலும், டெக்ஸ் சிணுக்கு எண் என்னும் துணையகின் மதிப்பு, பருத்திச் சிணுக்கு எண் என்னும் துணையலகின் மதிப்பிலிருந்து மாறு படும். எனவே, முறுக்குக் காரணியின் மதிப்பு வேறு படும். மேலும், டெக்ஸ் வழி முறை ஒரு நேரடி வழி முறையாகும்., பருத்திச் சிணுக்கு எண் முறையோ ஒரு மறைமுக வழி முறையாகும். எனவே, அலகு நீளத்தில் சுற்றுகள், முறுக்குக் காரணி, இழைச் சிணுக்கு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புச் சமன்பாட்டின் வடிவமும் மாறு படும். 1 மீ. இடைவெளியில் உள்ள சுற்று = ஒரு துணியின் நெசவு நெருக்கத்தைக் குறிப்பிடும் மூடு காரணி (Cover factor) பழைய முறையில் K = எனவும் டெக்ஸ் முறையில், K = 1 செ.மீ. இடைவெளியில் நூல் எண்ணிக்கை X √டெக்ஸ் சிணுக்கு எண் எனவும் ஆகும். டெக்ஸ் = டெக்ஸ் = டெனியர் X 0.111 சிணுக்கு எண் அளவை முறை. சிணுக்கு எண் எந்த அலகில் குறிப்பிடப் பட்டாலும், நூலின் நீளத்தையும், எடையையும் துல்லியமாக ,அளப்பதற்கு விரிவான வழி முறைகள் தேவைப் படுகின்றன. இம்முறைகள் பெரும்பாலும் ஆய்வுக்காகக் கிட்டும் மாதிரிப் பொருளின் நீளத்தைப் பொறுத்து வகுக்கப் படுகின்றன. நீள அளவை. சிட்ட வடிவில் நூல் தார்க் குழலிலோ, கூம்புக் கூடுகளிலோ சுற்றப் பட்டிருந்தால், ஒரு போர்த்தும் திருகு வட்டத்தைச் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூற்கண்டுகளைச் சுற்றலாம். இதனைச் கையாலோ, விசையாலோ இயக்கலாம். பருத்தி நூல்களுக்கு இத்திருகு வட்டத்தின் சுற்றளவு 54 அங்குலம். எனவே, 80 சுற்றுகள், 120 கெஜம் (அல்லது ஒரு குஞ்சம்) கொண்ட நூற்கண்டைத் தருகின்றன. ஒவ்வொரு பயன் முறைக்கும் தக்கவாறு திருகு வட்டச் சுற்றளவும், கண்டு நீளமும் தேர்ந்தெடுக்கப் படும். நூல் கண்டு கட்டப் படும் இழு விசையைப் பொறுத்து, நீளம் மாறக் கூடுமாதலால், ஒரு நூற்கண்டு அளவியைக் கொண்டு திருகு வட்டத்தின் இழுவையைத் துல்லியமாக அளத்தல் வேண்டும். நூல் கண்டு 440 கெஜ நீள நூலின் பளுவால், இழுக்கப் படும் போது, நூல் கண்டின் சுற்றளவு திருகு வட்டத்தின் சுற்றளவிலிருந்து 0.5Hக்கு மேற்படாதவாறு வேறு பட்டிருக்க வேண்டும். இவ்வாறிருப்பின், திருகு வட்டத்தின் இழு விசை சரியாக இருப்பது போன்று தோன்றும். சிட்டத்திலிருந்து நூலைப் பிரிக்கும் போது இழு விசை அகற்றப் படுவதால், நூல் சற்றே சுருங்குகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு நூலைச் சிட்டத்தில் இழுத்துக் கட்டிய பின்பு, ஆய்வுச் சூழ்நிலையில், மூன்று மணிகளுக்குக் குறையாமல் தளரச் செய்து, பின்பு திருகு வட்டத்தில் சுற்ற வேண்டும். குட்டையான நூல்கள். துணியிலுள்ள நூல்கள் ஏறக் குறைய ஒரு கெஜத்திற்கு மேல் நீளமுடையனவாக இருப்பதில்லையாதலால், இந்நூல்களுக்கு ஆய்வு முறைகள் சற்றே திருத்தப் படுகின்றன. ஆய்வுச் சூழ்நிலையில், 24 மணி நேரத்திற்குப் பதப் படுத்தப் பட்ட பின்பு, செவ்வக வடிவில் இரு பாவுக் குறுந் துண்டுகளும் (strips), ஐந்து ஊடு வகைக் குறுந் துண்டுகளும் வெட்டி எடுக்கப் படுகின்றன. இத்துண்டுகள் ஒவ்வொன்றும் குறைந்தது 20' நீளமுடையனவாகவும், அகல வாக்கில் குறைந்தது 50 நூல்கள் பிரித்தெடுக்கப் பட வல்லனவாகவும் இருத்தல் வேண்டும். இரு பாவு வகைத் துண்டுகள், ஏறத் தாழ 100 பாவு வகைச் சிட்டங்களைக் குறிப்பிடுவனவாதலால், இயைபிலா மாதிரி (random sample) தயாரிக்கப் பட்டதாகக் கொள்ளலாம். ஆனால், ஐந்து ஊடு குறுந்துண்டுகள் ஐந்து ஊடு வகைச் சிட்டங்களை மட்டுமே பதிலிட இயலும். நூல்கள் ஒன்றுக்கொன்று பிணைப்புறுவதால், துணியிலிருந்து அகற்றப்படும் நூலில் அலைவு இருக்கும். அலைவின் அளவு தெரிந்திருந்தாலன்றி, நீட்டப் பட்ட நிலையில் நூல் நீளம் அறியப் பட வாய்ப்பில்லை. அலைவு விழுக்காடு = X 100 இறுதியாகச் சிணுக்குக் கணக்கீடுகளில் பயன் படுத்தப் படும் நூல் நீளத்தின் மதிப்பு = ஆகும். மிகச் சிறிய துணி மாதிரிகளுக்குச் சிறப்பான ஆசுப் பலகைகள் நூல்களை வெட்டுவதற்கான அமைக்கப் படுகின்றன. எடை அளவை. நூலின் எடையைக் கண்டறியப் பயன் படும் தராசுகளின் துல்லியம் {[sfrac|1|500க்குக் குறையாதிருத்தல் வேண்டும். நூல் நிறுத்தலில் எதிர் கொள்ளப் படும் பெரும் சிக்கல் ஈர ஏற்பு ஆகும். இதற்கென இரு வழி முறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. 1. என்னும் காரணியினால் அடுப்பில் உலர்த்தப்பட்ட நூலின் எடையைப் பெருக்க வேண்டும். 2. ஆய்வுச் சூழ்நிலையில் சம நிலை எய்திய பிறகு, அதே சூழ்நிலையில் நிறுத்த வேண்டும். இரு வழி முறைகளின் ஆய்வுகளும் சமமாக இருப்பதில்லை; ஏனெனில், நடை முறை ஈர ஏற்பும், செயற்கை நியமச் சூழ்நிலையில் தோன்றும் சம நிலை ஈர ஏற்பும் ஒன்றாக இரா. முதல் முறை, துல்லியமான முடிவுகளைத் தரக் கூடியது என்றாலும், இரண்டாம் முறை அனறாட ஆய்வுக்கு எளிதான முறையாகையால், பெரிதும் விரும்பப் படுகிறது. இவை தவிர, கம்பளித் தொழில் ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப் படுத்தியுள்ள முறையில், உலர்த்தும் அமைப்பிலேயே அளவைகள் நிகழ்த்தப் படுகின்றன. சேர்க்கை மற்றும் விலக்கப் பொருள்கள். நூற்புக் கதிருக்கும், முழுமையாக்கப்பட்ட துணிக்கும் இடைப்பட்ட கட்டங்களில், நூல் பல திருத்தங்களுக்குள்ளாகிறது. இவற்றில், துணியின் நிறை மாறுவதற்கு வாய்ப்புண்டு. பாவு நூல் கஞ்சியிடல் போன்ற செயல்கள் துணியின் நிறையைக் கூடுதலாக்குகின்றன; கழுவுதல், நிற நீக்கம் போன்ற முறைகளினால் துணியின் நிறை குறையக் கூடும். இதன் விளைவாக, ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுச் சிணுக்கு எண்ணில் திருத்தம் செய்ய வேண்டி வரும். இழைச் சிணுக்கு அளவையை, நேரடியாகக் காண்பிக்க நோல்ஸ் தராசு (Knowles balance), கால் வட்ட வடிவத் தராசு ( quadrant balance) போன்றன பயன் படுகின்றன. பீஸ்லி (Beesley) தராசு என்னும் கருவியில், ஆதாரத்தின் ஒரு புறம் ஒரு கொக்கியும், மறு புறம் ஒரு காட்டியும் பொருத்தப் பட்டுள்ளன. ஆதாரக் கம்பியை முதற்கட்டமாக ஒரு தரவுக் கோட்டைக் ( datum line) காட்டி நோக்குமாறு சரி செய்ய வேண்டும். காட்டியின் பக்கத்தில், ஆதாரக் கம்பியிலிருந்து ஒரு காடியிலிருந்து ஒரு நியம எடை தொங்க விடப் படுகிறது. நூலை ஆசுப் பலகையினால், சிறு துண்டுகளாக வெட்டி, இத்துண்டுகளைக் கொக்கியில் மாட்டி, காட்டி தொடக்க நிலையை மீண்டும் தொடுமாறு சரி செய்தல் வேண்டும். இச்சமன் செய்தலுக்குத் தேவைப் படும் நூல் துண்டுகளின் எண்ணிக்கையே நூலின் சிணுக்கு எண்ணாகும். இரட்டிப்பாக்கப் பட்ட நூல்கள். இரு நூல்கள் இணைக்கப் பட்டுத் தயாரிக்கப் படும் நூலின் சிணுக்கு எண்ணை அறிவதற்கு, விரிவான வழி முறைகள் உள்ளன. இருமடி பருத்தி நூலொன்றின் சிணுக்கு எண் 145 என்றும், இரட்டிப்பு முறையின் போது, 10% சுருக்கம் நேரும் என்றும் கொள்ளலாம். மறைமுக முறையில் உள்ளுறை நகல்களின் சிணுக்கு எண்களின் தலை கீழ் மதிப்புகளின் கூட்டுத் தொகை இருமடி நூலின் விளைவு, சிணுக்கு எண்ணின் தலை கீழ் மதிப்பாகும். \frac{1}{N_1} + \frac{1}{N_2} = \frac{1}{N} = N_2 எனில், \frac{2}{N_1} = \frac{1}{N}, N_1 = 28s சுருக்கத்தினால் ஒற்றை இழைகள் இரண்டும் சன்னம் குறைந்து விட்டமையால், மேற்கூறிய மதிப்பீட்டின் சன்னத்தை 10% உயர்த்த வேண்டும். அதாவது, 28 X 1.1 = 30.8s. சிலவற்றில், இரட்டிப்புச் செயலினால் உட்கூறு நூல்களின் நீளம் கூடுதலாகி விடும். இங்கு மதிப்பிட்டுத் திருத்தம் எதிர்த் திசையில் செல்லும். இரட்டிப்பாக்கப் பட்ட நூல்களுள் இரண்டினை இணைத்து, மீண்டும் இரட்டிப்பாக்கலாம். இம்முறை டயர் (tyre) தொழில் நுட்பத்தில் முதன்மை பெறுகிறது. இங்கு சிணுக்கு எண்ணை அறிவது எளிதாயினும், துல்லியமான மதிப்புகள் பெறப் படுவதில்லை. சிணுக்கு எண்ணும் நூல் குறுக்களவும்: நூலின் குறுக்கு வெட்டுத் தோற்றம், வட்டமாக இருப்பதாகக் கொள்ளப் படுகிறது. இதன் அடிப்படையில் பருத்தி வகை நூல்களின் விட்டத்திற்கு வாய்ப்பாடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன: விட்டம் (அங்குலங்களில்) = மணிக் கம்பளி வகை நூல்களுக்கு விட்டம் (அங்குலங்களில்) = பொதுவாக, விட்டம் = 3.75 \times 10^{-3} \sqrt {N} செ.மீ. N = டெக்ஸ் மதிப்பு முறுக்கு அளவை. நூலின் உட்கூறு இழைகளை ஒருங்கிணைத்து வைப்பதற்குத் தேவைப் படும் சுருள்களின் அளவு முறுக்கு எனப் படுகிறது. நூலின் அச்சுக்கு இணையானதொரு கோட்டை, மையமாகக் கொண்டு நூலைச் சுழற்றும் இயக்கம் முறுக்காகும். முறுக்கேற்றத்தினால், நூலுக்கு வலியும், ஓரியல்பும் (coherence) ஏற்படும். முறுக்கின் திசை. ஆங்கில எழுத்துக்களான S மற்றும் Z ஆகியனவற்றைக் கொண்டு எதிரெதிர்த் திசை முறுக்குகளைக் குறிப்பிடலாம் (படம் 1). முறுக்கின் அளவு = இவ்வழி முறையின் படி, முறுக்கைக் குறிப்பிடுதல் பெரும்பாலான சூழ்நிலைகளில், நிறைவு தருவதாக இருந்தாலும், நூலின் சிணுக்கு எண்ணுக்குத் தொடர் பற்றுள்ளது. முறுக்குக் காரணி (twist factor) என்னும் துணையலகைக் கொண்டு, சிணுக்கு எண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலே, முறுக்கு இயல்பை அறியலாம். ஓர் அங்குலத்தின் சம அளவு சுற்றுகளைக் கொண்ட முரட்டு நூலும், சன்ன நூலும் வெவ்வேறு முறுக்கு இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூலின் கருத்தியல் வழிக் கூறு ஒன்று படம்.2 இல் காட்ட ப்பட்டுள்ளது. நூலின் புறப் பரப்பில், ஓர் இழை திருகு பாதையில், நூலின் அச்சை ஒரு சுற்று வருவதைக் காணலாம். திருகு சுற்றின் தொடு கோட்டிற்கும், நூலின் அச்சுக்கும் இடைப் பட்ட கோணம் முறுக்குக் கோணம் (twist angle, θ) எனப் படுகிறது. புறப் பரப்பு அடுக்கைத் தட்டையாகக் கற்பனை செய்கையில், இழை ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம் (hypotenuse) ஆவதைக் காணலாம். நூலின் குறுக்களவு d அங்குலம், ஒரு முறுக்கின் நீளம் l எனில், tan \theta = \frac {\pi d}{l} இங்கு 1⁄l ஓர் அங்குலத்திலுள்ள சுற்றுகள். \tan \theta \times dx ஓர் அங்குலத்திலுள்ள சுற்றுகள். dx ஆதலால், tanθ X , இதனை 1 அங்குலத்தில் சுற்றுகள் = K√சிணுக்கு எண், K = முறுக்குக் காரணி எனும் மாறிலியாகும். இது முறுக்குக் கோணத்தின் தொடு கோட்டுக்கு நேர் விகிதமாகும். முறுக்குக் காரணி சமமாக இருக்கும். ஓரளவுக்கு முறுக்குக் காரணி நூலின் தன்மையையும் சுட்டும். முறுக்குக் காரணி = 3 எனக் கொண்ட பருத்தி நூல் மென்மையுடையதாகவும், முறுக்குக் காரணி = 6 எனக் கொண்ட நூல் கடினத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். பாவு, ஊடு, பின்னல், தையல் எனப் பயன்களைப் பொறுத்தே நூலின் முறுக்குக் காரணி தேர்ந்தெடுக்கப் படும். நேரடி நூல் எண் முறை தேர்ந்தெடுக்கப் பட்டால், அலகு நீளத்தில் சுற்றுக்களின் எண்ணிக்கை, முறுக்குக் காரணி, இழைச் சிணுக்கு எண் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு வடிவம் மாறும். இந்நிலையில், நூலின் குறுக்களவு நூல், இழைச் சிணுக்கு எண்ணின் வர்க்க மூலத்திற்கு நேர் விகிதத்தில் அமையும். டெக்ஸ் வழி முறை. டெக்ஸ் முறுக்குக் காரணி = ஒரு மீட்டரில் உள்ள சுற்றுகள் 1 \times \sqrt{N} . இக்கணக்கீட்டின்படி தளர் முறுக்கு நூல்களுக்கு முறுக்குக் காரணி ஏறத் தாழ, 2000 ஆகவும், இறுக்கி முறுக்கப் பட்ட நூல்களுக்கு முறுக்கு காரணி ஏறத் தாழ 10000 ஆகவும் இருக்கும். இவ்வெண் மதிப்புகள் சற்றே எளிதில் கையாள முடியாதனவாகத் தோன்றுகின்றன. நூலின் கட்டமைப்பின் முறுக்கேற்றத்தின் பங்கு. நூலுக்கு வலிமை இணக்கம், ஓரியல்பு ஆகிய பண்புகள் முறுக்கேற்றத்தினால் மட்டுமே கூடுகின்றன. எனினும், ஒரு குறிப்பிட்ட முறுக்கேற்றத்தில் நூலில் வலிமை பெரும நிலையை அடைகின்றது (படம் 3.) <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> முறுக்கேற்றத்தின் அளவையும் திசையையும் கட்டுப் படுத்தி அல்லது மாற்றியமைத்துத் துணியின் தோற்றத்தில் பொலிவை உருவாக்கலாம். போலிக் கோடு (Shadow stripe) என்னும் காட்சி விளைவு இவற்றுள் ஒன்றாகும். S மற்றும் முறுக்குகளை மாற்றியமைத்துப் பாவு நெசவு செய்து பெறப் படும் துணியில் நிழல் வரிகள் தோன்றும். இவ்விரு முறுக்கேற்ற வகை நூல்களிலிருந்தும், ஒளி எதிரொளிப்பு (reflection) மாறுபட்டிருப்பதனால், இவ்விளைவு தோன்றுகிறது. வெட்டப் பட்டு, சமதளமாக்கப் பட்ட புல்வெளியைப் போன்ற தோற்றம் இதில் இருக்கும். இரு படை நெசவில் (twill weave) முறுக்கேற்றத் திசையைத் தக்கவாறு அமைத்து, இரு படை வரியை வெளிக் கொணரவோ, மறைக்கவோ இயலும். இந்நெசவில், பாவு நூல் Z வகை முறுக்குக் கொண்டிருப்பின், ஊடு நூல் S வகையாக இருப்பின், இரு படை வரி அழுத்தமாகவும், ஊடு நூல் Z–வகை முறுக்கேற்றத்திலிருப்பின், இரு படை வரி தெளிவாகவும் தோற்றமளிக்கும். முறுக்கேற்ற அளவை. பொதுவான பயன்களுக்கான நூல் வகைகளின் முறுக்கேற்ற அளவை முறைகள் பல உள்ளன. முறுக்கேற்ற ஆய்வுக்குத் தேவைப்படும் மாதிரிப் பொருள் தேர்வில் மிகுந்த கவனம் தேவை. நூலின் தடித்த பகுதிகளிலும், மெலிந்த பகுதிகளிலும் முறுக்கேற்றம் மாறுபட்டிருக்கும். எனவே, மாதிரி நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மொத்த நூலில் ஏறக் குறைய கெஜ இடைவெளியில் மாதிரித் துண்டு நூல்களை வெட்டி எடுக்க வேண்டும். முறுக்கேற்றத்தைக் கண்டறிவதற்குச் செய்ய வேண்டிய ஆய்வுகளின் எண்ணிக்கை அறியப் பட்டுள்ளது. ஆய்வுக்கான நூலைக் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில், முறுக்குப் பங்கீடு பாதிக்கப் படும். கை விரல்களால் நூலைத் தொடுதலைத் தவிர்த்தல் நலம். நீட்டப் பட்ட இழை முறை. நூலின் இரு முனைகளையும் ஒன்றுக்கொன்று ஒப்பீடாகச் சுழற்றுவதால், முறுக்கேற்றம் தோன்றுகிறது. எனவே, முறுக்கேற்றத்தை அகற்றி, மீண்டும் நூல்களை ஒன்றுக்கொன்று இணையாக அமைப்பதற்குத் தேவைப்படும் சுற்றுகளை எண்ணினால், முறுக்கின் அளவு தெரிய வரும். ஓர் அங்குல இடைத் தொலைவு கொண்ட இரு பிடிப்பிகளுக்கிடையே நூல் இழுத்துப் பொருத்தப்பட்டு, ஒரு பிடிப்பியைச் சுழற்றி, நூலின் முறுக்கை அகற்ற வேண்டும். இது நிகழ்கையில், இப்பிடிப்பியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழற்சி அளவியில் சுற்று எண்ணிக்கை பதிவாகும். நிலைத்து நிற்கும் பிடிப்பிக்கு அருகே இழைகளுக்கிடையே ஓர் ஊசியைப் புகுத்தி, சுழலும் பிடிப்பியின் திசையில் நகர்த்த வேண்டும். ஏதேனும், முறுகேற்றம் எஞ்சியிருக்குமாயின், அது சுழலும் பிடிப்பியில் செலுத்தப் பட்டு, சன்ன திருத்தத்தினால் அகற்றப் படுகிறது. 50 ஆய்வுகள் செய்து, இம்முடிவுகளின் சராசரி கணக்கிடப் படுகிறது. தொடர் முறுக்கு அளவி (Continous twist tester). மாதிரி நூல்களை மொத்தத்திலிருந்து அகற்றாமலேயே, ஆய்வு செய்வதற்கு WIRA ஒரு முறையை உருவாக்கியுள்ளது. நோக்கப்பட்ட இழை முறையின் அடிப்படைக் கொள்கையே இங்கும் பின் பற்றப் படுகிறது. சிட்டத்திலிருந்து நூல் ஒரு வழி படுத்தும் உருளை (guide roller) வழியே சென்று, முதலில் நிலைத்த பிடிப்பி வழியாகவும், இறுதியாக நூல் சுற்றும் உருளைக்கும் செல்கிறது. இரு பிடிப்பிகளுக்கு இடைப் பட்ட நூல் பகுதியில் முறுக்கு அகற்றப் பட்டு, அளவியில் சுற்று எண்ணிக்கை அளக்கப் பட்ட பின்பு, மீண்டும் பழைய நிலைக்கே முறுக்கப் படுகிறது. முறுக்குச் சுருக்க முறை (Twist Contraction method). ஓர் இழைப் புரியில் முறுக்கேற்றுதல், அதன் நீளத்தைக் குறைக்கும். Z–வழி முறுக்கேற்றம் கொண்ட ஒரு நூலின் நீளம் h ஆகவும், முறுக்கு முழுமையாக அகற்றப் பட்ட பின்பு, (h+c) ஆகவும் இருப்பின், c நீளக் குறைவு ஆகும். அகற்றப்பட்ட சுற்று, எண்ணிக்கைக்குச் சமமாக S–வகை முறுக்கேற்றத்தைத் தோற்றுவித்தால், நூல் மீண்டும் பழைய நீளமான hஐ அடையும். இவ்வழி முறையில், ஓர் ஆய்வை 10 முறை (10 மாதிரி நூல்களில்) நிகழ்த்தினால் போதுமானது. கம்பளி நூல்களைப் பொறுத்த வரை, சுருக்க முறையின் முடிவுகள் நீட்டப் பட்ட இழை முறை முடிவுகளை விட, ஏறத் தாழ 20% குறைவாக உள்ளன. மணிக் கம்பளி நூலில், இவ்வேறுபாடு 15% கூடுதலாக உள்ளது. துல்லியமான ஆய்வு முடிவுகள் தேவைப் படின், 1 அங்குல நீட்டப்பட்ட இழை முறையே சிறந்த பயன் தரும். அறுகும் வரை முறுக்கும் ஆய்வு (Twist-to-break test). நூல் அறுகும் வரை, தொடர்ந்து முறுக்குவதற்குத் தேவைப் படும் சுற்றுகளின் எண்ணிக்கை, (n₁), குறித்துக் கொள்ளப் படுகிறது. பின்பு, எதிர்த் திசையில் சுற்றி, இதே ஆய்வு மீண்டும் நடத்தப் படுகிறது. இப்போது, அறுப்பதற்குத் தேவைப் படும் சுற்றுகளின் எண்ணிக்கை (n₂) எனில், முறுக்கின் அளவு = ½(n₁ - n₂). நுண்ணோக்கியால் முறுக்கேற்ற அளவை: சுழலும் தளம் கொண்ட நுண்ணோக்கியொன்றில் தளத்தின் விளிம்பில் கோண அளவீடுகள் செய்யப் பட்டால், முறுக்குக் கோணத்தை அளக்கலாம். தளத்தை 0”இல் இருத்தி, தகுந்த பிடிப்பியில் நூலைப் பொருத்திக் கண்ணருகு வில்லை (eye piece) நகரும் மென் கோட்டை நூலின் அச்சுடன் இரண்டறத் தெரியுமாறு, செய்ய வேண்டும். இப்போது சுழலும் தளத்தைச் சுழற்றி, நூலின் முறுக்கேறிய இழைகளிளாலான திருகு சுருளுக்குத் தொடு கோடாக மென் கோட்டைக் கொணர வேண்டும், தளத்தைச் சுழற்றிய கோணம் முறுக்குக் கோணமாகும். நூலின் ஒரு சுற்று முறுக்கின் நீளம் (h) = \frac{\pi d}{tan \theta} இங்கு d = நூலின் விட்டம் ஓர் அங்குலத்தில் சுற்று எண்ணிக்கை = \frac{1}{h} = \frac {\tan \theta}{\pi d} முறுக்குக் கோணமும், நூல் குறுக்களவும் நூலின் பகுதிக்கு பகுதி மாறுபடுமாதலால், நிறைந்த எண்ணிக்கையில் ஆய்வுகளை நடத்த வேண்டும். மடிப்பு நூல்களில் முறுக்கு அளவை. முறுக்கை இரு மடியாக்கும் போது, மடிக்கப்பட்ட நூல்களில் விரிவோ, சுருக்கமோ தோன்றக் கூடும். முறுக்கப்பட்ட நிலைக்கும், முறுக்கப்படாத நிலைக்கும் நீள மாற்றம் (take up) = X 100 இதன் அடிப்படையில் கால் வட்ட முறுக்கு அளவி (qudrant twist tester) என்னும் கருவி செயல் படுகிறது. நூலின் முடித்தோற்றம் (hair ness). தொடர் நீளிழை நூல்களுக்கும், செட்டிழைகளிலிருந்து நூற்கப்பட்ட நூல்களுக்கும் ஒரு முதன்மையான வேறுபாடு, வெட்டிழை நூலின் முடித் தோற்றமாகும். அதாவது, நூலின் பரப்பிலிருந்து, இழை முனைகளும், கண்ணிகளும் நீட்டிக் கொண்டிருக்கும். யாப்பு நூல்கள் (textured yarn). வெப்பத்தால் இளக வல்ல நீளிழை நூல்களின் அடிப்படையில், சில சிறப்பு நூல்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. அவை கொள்ளளவு உயர்த்தப் பட்ட நூல்கள் (bulk yarns), நீட்சி நூல்கள் (stretch yarns), திருத்தப் பட்ட நீட்சி நூல்கள் (modified stretch yarns) என்பன. இவ்வகை நூல்களிலிருந்து தயாரிக்கப் படும் துணிகளின் தன்மைகள் அலைவு விறைப்புப் (crimp rigidity) பண்பினால் பாதிக்கப்படுவதால், இந்நூல்களின் நீள வாக்கில் அமுங்கும் தன்மை முதன்மை பெறுகிறது. Hosiery and Alied Trades Research Association (HATRA) எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆய்வில், ஒரு டெனியருக்கு 0.1 கி. என்னும் விகிதத்தில் ஒரு சுமை. நூல் கண்டிலிருந்து தொங்க விடப் பட்டு நீரில் அமிழ்த்தப் படுகிறது. இரண்டு நிமிடங்களுக்குப் பின்பு, அதன் நீளம் அளக்கப் படுகிறது (ட₁) . சுமை ஒரு டெனியருக்கு 0.002 கி. என்னும் அளவுக்குக் குறைக்கப் பட்டு, மீண்டும் நீளம் அளக்கப் படுகிறது(ட₂) . அலைவு விரைப்பு = \frac {(L_1 - L_2)}{L_1} 100 % பல்வேறு டெனியருக்குத் தகுந்தாற் போல், பல்வேறு எடைக் கற்கள் தேவைப் படுகின்றன. இந்த ஆய்வு 5 நிமிடங்களில் முடிவு பெறும். ஆய்வு முறை தானியங்கியாக மாற்றப் பட்டால், ஒரு பணியாளர் 60 ஆய்வுகள் வரை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். அலைவு விறைப்பு சம அளவில் கொண்ட நூல்களை இணைத்துத் தயாரிக்கப் படும் துணிகளில், குறைபாடுகள் தென் படுவதில்லை. —மே. ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். J.E. Booth, Principles of Textile Testing, Third Edition, Newnes–Butterworth, London, 1968.