அஞ்சில் ஆந்தையார்
añcil āntaiyār
ஒரு சங்கப்புலவர்; அஞ்சில் என்னும் ஊரினர்; ஆதன் என்பாரின் தந்தையார்.
ஒரு சங்கப்புலவர்; அஞ்சில் என்னும் ஊரினர்; ஆதன் என்பாரின் தந்தையார். ஆதன் தந்தையார் என்னும் தொடர்மொழி ஆந்தையாரென்று மருவிற்று. எனவே, இவர் ஊர்ப் பெயருடன் சேர்த்து அஞ்சிலாந்தையார் என்றழைக்கப்பட்டார். சில பதிப்புகளில் இவர் பெயர் அஞ்சியாந்தையார் என்றும் காணப்படுகிறது. இவர் நற்றிணைப் பாடல் ஒன்றும் (283) குறுந்தொகைப் பாடல் ஒன்றும் (294) பாடியுள்ளார். இவரது நற்றிணைப் பாடல் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது. இப்பாடல் தலைவியை முறைப்படி மணந்து கொள்ளாது நெடுங்காலம் களவு வாழ்க்கையில் ஈடுபட்டு ஒழுகும் தலைவனைச் சால்பு இல்லாதவன் என்று தோழி தலைவியிடம் இழித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இது தலைவியின் நல்வாழ்வில் தோழி கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.
இவரது குறுந்தொகைப் பாடல் நெய்தல் திணையில் அமைந்துள்ளது. தலைவி தோழிமாருடன் விளையாடியபோது, தலைவன் அடிக்கடி வந்து சென்றதால், ஊரார் பலர் பலவாறு பேசலாயினர். அதனால், தாய் அவளை வீட்டிலேயே இருக்கச் செய்தாள். இதனைத் தலைவன் உணருமாறு தோழி தலைவியிடத்துக் கூறியதாக இப்பாடல் அமைந்துள்ளது. பழந்தமிழ்ப் பெண்டிர் விளையாட்டுகள் ஒன்றான ‘தழுவணி’ என்ற குரவையாடல் இதில் குறிப்பிடப்படுகிறது. வே.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 201)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/atas3agp/
தமிழ்“அஞ்சில் ஆந்தையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/atas3agp/APA
Oliyon Research. (2026). அஞ்சில் ஆந்தையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/atas3agp/MLA
"அஞ்சில் ஆந்தையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/atas3agp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment