சிற்றலைத் தொட்டி
ciṟṟalait toṭṭi
இது ஓர் ஆழமற்ற, அகன்ற தொட்டியாகும்.
இது ஓர் ஆழமற்ற, அகன்ற தொட்டியாகும். அதில் நீர்மங்களை வைத்து இசைக் கவை அல்லது அதிர்வு தகட்டின் உதவியால், புறப் பரப்பு அலைகளை உண்டாக்க முடியும். அலை இயக்கவியலின் பதங்களில் விளக்கப்படக் கூடிய பல இயற்பியல் நிகழ்வுகளை ஆய்வு செய்ய இத்தகைய சிற்றலைத் தொட்டிகள் (ripple tanks) பயன்படுகின்றன. நீரில் உண்டாகும் அலைகள், ஒலி அலைகள், ஒளி மற்றும் ஒலி, ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றின் மின்காந்த அலைகள் ஆகியவற்றின் பண்புகளை இத்தொட்டியின் உதவியால், ஆய்வு செய்ய முடிகிறது. ஓர் அலையின் அலைவு நேரம் (T), அலை நீளம் (L), அதிர்வு எண் (f=) எனில், அதன் திசை வேகம் C = fL = . ஒரு நீர்மத்தின் மேற்பரப்பில் உண்டாகும் அலைகளின் பரவல் திசை வேகம் நீர்மத்தின் அடர்த்தி, ஆழம், பரப்பு இழுவிசை ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. ஒரு சிற்றலைத் தொட்டியில் உள்ள நீர்மத்தின் அடர்த்தி c, பரப்பு இழுவிசை (σ), நீர்மத்தின் ஆழம் (h) அலை பரவும் திசை வேகம் (C) எனில்,
C^2 = (\frac{gL}{2\pi}+ \frac{\sigma}{\rho}\frac{2\pi}{L}) tanh \frac{2\pi h}{L}
இதில் g என்பது புவியீர்ப்பு முடுக்கம். சிற்றலைத் தொட்டியில் ஒரு குறிப்பிட்ட மாறிலியான அதிர்வெண்ணுடன் அதிர்வுறும் அதிர்வியின் மூலம் சிற்றலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. எனவே, L = என வைத்துக் கொண்டால், larger|C^2 = [(\frac{g}{2\pi f})C + (\frac{2\pi f \sigma}{\rho})\frac{1}{C}] tanh (2\pi f) \frac{h}{C}
ஒரு குறிப்பிட்ட நீர்மமுள்ள சிற்றலைத் தொட்டியில், அதிர்வியின் அதிர்வெண் மாறிலியாக இருக்கும் போது, பிறைக் கோடுகளுக்குள் இருக்கிற பதங்கள் மாறிலியாக இருக்கும். எனவே, சிற்றலையின் பரவல் திசை வேகம் நீர்மத்தின் ஆழத்தை மட்டுமே பொறுத்ததாகி விடுகிறது. ஆனால், ஆழம் மிகும் போது, tanh பதம் விரைவாக ஒன்றுக்குச் (1) சமமாகி விடும். அப்போது அலையின் பரவல் திசை வேகம் C என்ற மாறிலியான மதிப்பை அடையும். இந்த C மதிப்பும், அதிர்வியின் அதிர்வெண்ணையும், நீர்மத்தின் பண்புகளையும் பொறுத்திருக்கும். அப்போது, larger|C_0^2 = (\frac{g}{2\pi f})C_0 + (\frac{2\pi f \sigma}{\rho})\frac{1}{C_0} சிற்றலைத் தொட்டியின் அளவீட்டைக் கணக்கிட C/C என்ற தகவிற்கும், நீர்மத்தின் ஆழத்திற்குமிடையே ஒரு வரைபடம் வரைய வேண்டும்.
ஒலி, ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றின் விளிம்பு வளைவு நிகழ்வுகளைச் சிற்றலைத் தொட்டியின் உதவியால், எளிதாக ஆய்வு செய்ய முடியும். ஒலி அலைகளுக்கு C/C என்ற தகவு, அலை விலகல் எண்ணுக்குச் சமம். ஒளி அலைகளுக்கு C/C என்ற தகவு ஒளி விலகல் எண்ணாகும். மின்காந்த அலைகளுக்கு C/C என்பது காந்த உட்புகு திறன் ஏறத்தாழ ஒன்றுக்குச் (1) சமமாக உள்ள பொருள்களின் மின் கடவா மாறிலிகளின் (dielectric constants) இருமடி மூலத்திற்குச் சமம்.
சிற்றலைத் தொட்டியின் அடிப் பரப்பைச் சரிவாக அமைப்பதன் மூலம், நீர்மத்தின் ஆழத்தை மாற்றலாம். அதன் அடிப் பரப்பில் ஒரு படி அமைப்பை ஏற்படுத்தினால், ஓர் அடர்வு குறைந்த ஊடகத்திற்கு இடையிலான எல்லைப் பரப்பை ஒத்த ஓர் அமைப்பைத் தோற்றுவித்து ஸ்நெல் விதிப்படி, அலை விலகல் ஏற்படுவதை நிகழ்த்திக் காட்டலாம். ஒளி மற்றும் ஒளி அலைகளின் வளைவுகளைச் சிற்றலைத் தொட்டியைக் கொண்டு ஆய்வு செய்யலாம். உணர் சட்டங்கள், ரேடோம்கள் (radomes) ஆகியவற்றின் இரு பரிமாண உருப் படிவங்களின் அருகில் கட்ட முகப்புகளை (phase fronts) ஆராய, இந்த அமைப்பு உதவுகிறது. துறைமுகம், கடற்கரை போன்றவற்றின் உருப் படிவங்களைச் சிற்றலைத் தொட்டிகளில் வைத்து நீர் அலை இயக்கத்தைப் பற்றிக் கண்டறிய முடிகிறது.
ஓர் இசையரங்கின் இரு பரிமாண உருப் படிவத்தைச் சிற்றலைத் தொட்டியில் வைத்து, அரங்கிற்குள் ஒலி அலைகள் பரவுகின்ற முறைகளைக் கட்டட ஒலியியல் வல்லுநர்கள் கண்டுபிடிக்கின்றனர். 2.5 செ.மீ. ஆழமுள்ள தொட்டிகளில் ஒரு ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணுள்ள அலைகளை உண்டாக்கி, இத்தகைய ஆய்வுகளை எளிதாகச் செய்ய முடியும்.
சிற்றலைத் தொட்டிகள் கண்ணாடி அல்லது ஒளி புகும் நெகிழிப் பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். அவற்றின் பக்கங்கள் செங்குத்தாக இருக்கும். மின்சாரத்தால் இயக்கப்படும் அதிர்விகள் நீர்ப் பரப்பில் மாறிலியான அதிர்வெண்ணுடன் சிற்றலைகளை உண்டாக்குமாறு பொருத்தப்பட்டிருக்கும். அதே அதிர்வெண்ணுடன் விட்டு விட்டு ஒளிரும் விளக்குகள் தொட்டியின் அடிப் பரப்பு வழியாக ஒளியைப் பாய்ச்சும், அந்த ஒளி ஒரு சொரசொரப்பான கண்ணாடித் திரையில் விழும் போது, அலை முகப்புகள் அசையா நிலையில் தெரியும். சிற்றலைகள் தொட்டியின் பக்கச் சுவர்களிலிருந்து எதிர்பலிக்கப்படாமலிருக்க, அவற்றில் துணி சுற்றிய கம்பி வலைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிர்வியின் முனையில் செங்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு சுடர் முனை நீர்மப் பரப்பைக் குத்திக் குத்திச் சிற்றலைகளை உண்டாக்குகிறது. —கே.என். ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 311)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aq69c9jg/
தமிழ்“சிற்றலைத் தொட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aq69c9jg/APA
Oliyon Research. (2026). சிற்றலைத் தொட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aq69c9jg/MLA
"சிற்றலைத் தொட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aq69c9jg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment