குட்டைம்ஸ் நச்சு நிரல்

kuṭṭaims naccu niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைநகல் போன்ற ஏனைய தொலைத்தகவல் தொடர்பு மூலமாகவும் பரவும் ஒரு நச்சுநிரல். மடலின் பொருள் பகுதியில் Good Times என்று காணப்படும்.இந்த மடலைத் திறந்து படிக்கும் பயனாளரின் கணினிக்குப் பாதிப்பு ஏற்படும்.ஒரு மின்னஞ்சலைத் திறந்து படிப்பதனாலேயே ஒரு கணினியை நச்சு நிரல் தாக்கும் அபாயம் இல்லை என்ற போதிலும்,ஒரு மின்னஞ்சலின் உடனிணைப்பாக (Attachment) அனுப்பப்படும் ஒரு கோப்பில் நச்சு நிரல் ஒட்டிக் கொண்டிருக்க முடியும்.வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நச்சுநிரல்கள் சில,நமக்குத் தெரியாமலே சங்கிலித் தொடராக அஞ்சல்களை அனுப்பச்செய்யும். தேவையின்றி இணைய அலைக்கற்றையையும், பயனாளரின் நேரத்தையும் வீணடிப்பது கூட நச்சுச் செயல் தானே! http://www.cert.org என்னும் இணையதளத்தில் நச்சு நிரல்கள்பற்றி மேலும் விவரங்கள் அறியலாம் — good times virus
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 208)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amadtxjk/

தமிழ்
“குட்டைம்ஸ் நச்சு நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amadtxjk/
APA
Oliyon Research. (2026). குட்டைம்ஸ் நச்சு நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/amadtxjk/
MLA
"குட்டைம்ஸ் நச்சு நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amadtxjk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment