அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூ இங்கிலாந்து மாநிலத்தின் தெற்கில் உள்ள மாநிலங்கள். அட்லாண்டிக்குப் பெருங்கடலை எல்லையாகவோ அதனுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்பு கொண்டோ உள்ள மாநிலங்களை அட்லாண்டிக்கு மாநிலங்கள் (Atlantic States) என்பர். நியூயார்க்கு, நியூ செர்சி, பென்சில் வேனியா ஆகிய மாநிலங்கள் மத்திய அட்லாண்டிக்கு மாநிலங்கள், தெலாவர், மேரிலாந்து, வர்சீனியா, வட கரோலினா, தென் கரோலினா, சார்சியா, பிளாரிடா போன்றவை தென் அட்லாண்டிக்கு மாநிலங்கள். மேற்கு வர்சீனியா உள் நாட்டில் அமைந்திருந்தாலும் இதனையும் அட்லாண்டிக்கு மாநிலங்களில் சேர்ப்பர்.