சிந்து வெளியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம். இங்கு இரண்டு மண் மேடுகள் உள்ளன. இங்கு அகழாய்வு செய்தபொழுது எட்டடிக் குறுக்களவுள்ள ஒரு கிணறும் ஒரு வளைவான கற்சுவரும் காணப்பட்டன. ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டங்களும் வேலைப்பாடமைந்த தொட்டிகளும் தரம் வாய்ந்த கல்லொன்றும் செம்மணியொன்றும் இவ்விடத்தில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளன.