உபமானப் பிரமாணத்தால் உண்டாகிற மெய்யறிவு. பிரமாணத்தால் உண்டாகின்ற மெய்யறிவு ‘பிரமிதி’ எனப்படும். அதுபோல அநுமானப் பிரமாணத்தால் உண்டாகிற மெய்யறிவு ‘அநுமிதி’ என்றும், உபமானத்தால் உண்டாகிற மெய்யறிவு ‘உபமிதி’ என்றும் பெயர் பெறுகின்றன. ஆமாவை (காட்டுப்பசுவை) அறியாதவன் காட்டில் செல்லும்போது ஆமாவைக் காண நேர்ந்தால் அது ஆவோடு ஒத்திருத்தல் பற்றி அதனை ஆமா என்று துணிவான். ‘ஆமா ஆப்போல்வது’ என அதனை அறிந்தோர் சொல்லக் கேட்டவனும் காட்டில் செல்லும் பொழுது ஆமாவைக் கண்டானாயின் தான் கேட்டறிந்த ஒப்புமையைக் காணுதலாலே, அதனை ‘ஆமா’ எனத் துணிவான். இத்துணிவுகள் மெய்யறிவே. இம்மெய்யறிவு ஒப்புமை பற்றி உண்டாவதால் இது ‘உபமிதி’ எனப்படும். இது நியாய வைசேடிக நூல் முறை. சி.அ.