சிதைத்துக் காய்ச்சி வடித்தல்
citaittuk kāycci vaṭittal
தாவரம் அல்லது விலங்கிலிருந்து பெறப்பட்ட பொருள்களைக் காற்றுப் புகாத கலனில் சூடு படுத்தும் முறை, சிதைத்து வடித்தல் (destructive distillation) எனப்படும்.
தாவரம் அல்லது விலங்கிலிருந்து பெறப்பட்ட பொருள்களைக் காற்றுப் புகாத கலனில் சூடு படுத்தும் முறை, சிதைத்து வடித்தல் (destructive distillation) எனப்படும். தாவர, விலங்கினப் பொருள்கள் பொதுவாகக் கரிம வகையைச் சார்ந்தனவாதலால், காற்றுடன் சூடு படுத்தினால், அவை எரிந்து கார்பன் டை ஆக்சைடு, நீராவி, நைட்ரஜன் போன்ற பொருள்களாக மாறுகின்றன. காற்றுப் படாமல் சூடு படுத்தும் போது, சிக்கலான மூலக் கூறு அமைப்புக் கொண்ட கரிமப் பொருள்கள் சற்றே சிதைவுற்றுப் பயன் மிக்க வேதிப் பொருள்களாக மாறும். இவ்வினைப் பொருள்களுள் பலவும் மருந்துகள், சாயங்கள், கரைப்பான்கள், நெகிழிகள் (plastics), நறுமணமேற்றிகள் எனப் பல பயன் மிக்க பொருள்களின் தயாரிப்பில் மூலப் பொருள்களாகின்றன.
பெருமளவில் சிதைத்துக் காய்ச்சி வடிததல் முறைக்குப் பயன் படுத்தப்படும் இயற்கைப் பொருள்களுள் நிலக்கரி, மரம், எண்ணெய்ப் பாறை (oil shale) பெட்ரோலிய தூய்மையாக்கலில் எஞ்சிய எண்ணெய், எலும்பு ஆகியன முதன்மையானவை. பொதுவாக, இவற்றைச் சிதைத்து வடித்தால், ஹைட்ரஜன், ஹைட்ரஜன் சல்ஃபைடு, அம்மோனியா போன்ற வளிமங்களும், தார் போன்ற எண்ணெயும், நீரில் கரைந்த அம்மோனியம் உப்புகள், ஆல்கஹால், கரிம அமிலம் ஆகியனவும் கிடைக்கும்.
.நிலக்கரியைச் சிதைத்து வடித்தல். நிலக்கரியைச் சிதைத்து வடிக்கும் முறைக்கு, கார்பன் செறிவூட்டல் (carbonisation) என்று பெயர். ஏனெனில், நிலக்கரியை விடச் சிதைத்துக் காய்ச்சி வடித்தலில் எஞ்சி நிற்கும் திண்மமான கல்கரியில் (coke), கார்பனின் சதவீதம் கூடுதலாகவுள்ளது. கார்பன் செறிவூட்டலை இரு வேறு வெப்ப நிலைகளில் நிகழ்த்தலாம். 650°Cஇல் நிகழ்த்தப்படும் முறை, குறை வெப்பநிலைக் கரியாக்கல் என்றும், 1000°C இல் நிகழ்த்தப்படும் முறை உயர் வெப்ப நிலைக் கரியாக்கல் என்றும் பெயர் பெறும். குறை வெப்ப நிலைக் கரியாக்கல் சமையல் கரித் தயாரிப்புக்கும், உயர் வெப்ப நிலைக் கரியாக்கல் உலோகப் பிரிப்புக்குப் பயன்படுகிற கல் கரி (metallurgical coke) தயாரிப்புக்கும் உதவுகின்றன.
கரியாக்கல் முறையில் உடன் விளையும் நிலக்கரி வளிமத்தின் இயைபு இரு கரியாக்கல் முறைகளிலும் வேறுபடுகிறது. கீழ் வெப்ப நிலை முறையில் விளையும் வளிமம், உயர் வெப்ப நிலை முறையில் கிடைப்பதை விடக் கூடுதலான வெப்பம் அளிக்கும் திறன் பெற்றது. கீழ் வெப்ப நிலை முறையின் குறைபாடு, கரியின் வெப்பம் கடத்தும் திறன் குறைவாக இருத்தலே ஆகும்.
உயர் வெப்ப நிலைக் கரியாக்கல் முறையில் கல் கரியின் விளைச்சலும், எளிதில் ஆவியாகக் கூடிய பொருளின் சதவீதமும் சற்றுக் குறைவாக இருப்பினும், கல் கரியின் தரம் உயர்வாகவே இருக்கும். தூய்மை, கடினத் தன்மை, வலிவு, நுண் துளை மலினம் ஆகியன கூடுதலாகவுள்ளன. இம்முறை இரு உத்திகளைக் கொண்டு செயலாக்கப்படுகிறது. அவை துளை மேடை அடுப்பு முறை (beehive oven method), ஆட்டோ-ஹாஃப்மன் அடுப்புகள் அல்லது கல் கரியை உடன் விளைவாக்கும் அடுப்புகள் (by product coke ovens) என்பன. பின்னர்க் கூறிய முறையில் வெளியாகும் வெப்பம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. கரியாக்கலில் வெளி வரும் வளிமமும் குளிர்விக்கப்பட்டு, அதனின்றும் அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, எளிதில் ஆவியாகும் ஹைட்ரோகார்பன்கள், பயன் மிக்க வேதிப் பொருள்கள் மலிந்த கரித்தார் (coal-tar) ஆகியன பிரித்தெடுக்கப்படுகின்றன. நிலக்கரியைச் சிதைத்துக் காய்ச்சி வடித்தலால் கிடைக்கும் ஏனைய பயனுள்ள பொருள்கள் செய்திறன் செறிந்த கரி (active carbon), கரிச் சாந்து, தூய கிராஃபைட் ஆகியன.
மரத்தைச் சிதைத்து வடித்தல். 1920ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மரத்தைச் சிதைத்துக் காய்ச்சி வடித்தல் மூலமே பெரும்பாலான வேதிப் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. மரத்தைச் சிதைத்து வடித்தலால் சிடைக்கும் பொருள்கள் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளன. இவ்வழிமுறையை முதன் முதலாகச் சீனர்கள் கண்டு பிடித்தனர். பின்பு, கிரேக்கர்களும், எகிப்தியர்களும் இம்முறையைப் பின்பற்றி இறந்தோர் உடலைப் பாதுகாக்கும் பூச்சையும், மரக்கலங்களை இணைக்கும் பொருளையும் தயாரித்தனர். இரும்புத் தொழிலில் மரக்கரி ஓர் ஒடுக்கியாகப் பயன்படுகிறது. ஸ்வீடன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் மண் களஞ்சியங்களில் (Meilers) மரக்கரி
வரம்பு (°C)
யைப் பெரிய அளவில் தயாரித்தனர். மரம் தவிர, தேங்காய் நார், உரி மட்டை, கடலைத் தோல், முந்திரிக் கொட்டை, நெல் உமி ஆகியவற்றையும் சிதைத்துவடித்து, ஈர்ப்பு ஆற்றல் மிக்க கார்பனைத் தயாரிக்கலாம். எலும்பைச் சிதைத்து வடித்துப் பெறப்படும் விலங்குக் கரி, சர்க்கரையின் நிறத்தை வெளிர் நிறமாக்கப் பயன்படுகிறது. எலும்பைச் சிதைத்து வடித்தலில் பெறப்படும் எண்ணெயில் பிரிடீன், பிரோல், கினோலீன் போன்ற கரிமப் பொருள்கள் அடங்கியுள்ளன.
மரத்தைச் சிதைத்து வடிப்பதற்குப் பண்டைக் காவத்தில் மண்ணாலான காளவாய்களும், பின்பு, செங்கல்லாலான சூளைகளும் பயன்பட்டன. அண்மைக் காலத்தில், உலோக வாலைகள் பயன்படுகின்றன. அகலமான இலைகளைக் கொண்ட மரங்கள் (hardwoods), ஊசியிலை மரங்களை விடப் (soft woods) பெருமளவில் அசெட்டிக் அமிலத்தையும் அடர்வு மிகு கரியையும் அளிக்கின்றன. கரியாக்கல் வெப்ப நிலை 250°C—450°C வரை நிகழும். சராசரியாக மரக் கரியின் விளைச்சல் மரத்தில் 40—45% ஆகும். —மே.ரா. பாலசுப்பிரமணியன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 232)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/af474xah/
தமிழ்“சிதைத்துக் காய்ச்சி வடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/af474xah/APA
Oliyon Research. (2026). சிதைத்துக் காய்ச்சி வடித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/af474xah/MLA
"சிதைத்துக் காய்ச்சி வடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/af474xah/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment