இலக்கணை
ilakkaṇai
இலக்கணை என்பது ஒரு பொருளைக் காட்டற்குரிய சொல்லை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது ஆகும்.
இலக்கணை என்பது ஒரு பொருளைக் காட்டற்குரிய சொல்லை மற்றொரு பொருளுக்குத் தந்துரைப்பது ஆகும். பொதுவாகச் சொல் ஒன்று பொருள் இரண்டாகக் கூறப்படுவதை இலக்கணை என்று கூறலாம். சொல் குறிப்பாக ஒரு பொருளையும் வெளிப்படையாக ஒரு பொருளையும் சுட்டக் கூடியது. இலக்கணை என்னும் சொல்லைப் பிரித்துக் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்ளலாம்.
இலக்கணை என்பதை இலக்கு, அணை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்த ஒரு கூட்டுச் சொல்லாகக் கொண்டால் மட்டுமே இவ்விளக்கம் பொருத்தும். கழகத் தமிழகராதியில் இலக்கு என்னும் சொல்லிற்கு இலட்சியம் என்றும் குறிப்புப்பொருள் என்றும் நாடிய பொருள் என்றும் பொருள் தரப்பட்டுள்ளது. அணை என்பதற்குப் பல பொருள் தரப்பட்டிருப்பினும், அது இலக்கு என்பதுடன் சேர்ந்து கரை, பாலம் முதலிய பொருளைத் தருவதாக அமைகிறது, ஆசு. ‘இலக்கணை’ என்பது ஒருவன் அல்லது ஒரு கவிஞன் தான் நாடிய பொருளை அல்லத குறிக்கோளாக–இலட்சியமாகக் கொண்ட பொருளை வெளிப்படையாகக் கூறாமல் அதனைத் திசை திருப்பிக் குறிப்பாக மற்றொரு பொருளின் மீது ஏற்றிக் கூறுவது எனலாம். ‘அணை’ என்ற சொல்லை இலக்கு என்ற சொல்லுடன் சேர்த்து இலக்கணை என்று சொல்லியிருக்க வேண்டும். காரணம், துணை (கரை) என்பது நீரோட்டம் மிகுந்த நதி அல்லது ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டு, நதியின் இயல்பான ஓட்டத்தைத் தடுத்து, அதைத் இசை திருப்பி அல்லது குறைத்து விழிவதாகும். அதுபோலக் கவிஞன் ஒருவன் தான் இயல்பாகக் கூறவந்த ஒரு பொருளைக் காட்டக்கூடிய சொல்லைக் கூறாமல், அச்சொல்லைத் திசை திருப்பி மற்றொரு பொ௱ருளுக்குத் தந்துரைக்கிறான்.
வடநூலார் சொற்பொருளை வாக்கியம், வியங்கியம், இலக்கணை என மூன்று வகையாகக் கூறுவர். இலக்கணையை வியங்கியத்துள் அடக்கிச் சொற்பொருள் இரண்டெனவும் கூறுவர். வாச்சியம் என்பது வெளிப்படையாகப் பொருளைக் கூறுவது. ஆனால், வியங்கியம் என்பது குறிப்பாகப் பொகுளைக்கூறுவது. இலக்கணை என்பதோ ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருளினுக்குத் தந்துரைப்பது என்பர். இதை விட்டஇலக்கணை, விடாது இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என மூன்று வகைப்படுத்துவர்.தே.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 283)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aejm9s3w/
தமிழ்“இலக்கணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aejm9s3w/APA
Oliyon Research. (2026). இலக்கணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aejm9s3w/MLA
"இலக்கணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/aejm9s3w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment