சுளகு
cuḷaku
சுளகு (விசாகம்)
சுளகு (விசாகம்)
இராசிச் சக்கரத்தின் ஏழாம் மண்டலம் துலாம் (libra). இதில் ஒளி மிகுந்த விண் மீன் இல்லை என்றே சொல்லலாம். பால் வழிக்குச் (millky way) சற்று வெளியில் இம்மண்டலம் அமைந்துள்ளது. ஆல்ஃபா, டெல்டா, பீட்டா என்னும் விண் மீன்களால் உருவாக்கப்படும் முக்கோணத்தைக் கொண்டு, இதை அடையாளம் கண்டு கொள்ள இயலுகிறது. ஆல்ஃபா லைப்ரா என்பது ஒரு நீள் வட்டத்தில் இயங்கி, ஓர் அழகு வாய்ந்த இரட்டை நீள் வட்டமாகத் தோற்றமளிக்கிறது. பீட்டா என்பது பச்சை வெள்ளை நிறத்திலுள்ளது. இவற்றின் பொலிவுப் பரிமாணம் 2-3க்கு இடையிலிருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். சுளகு (விசாகம்) என்பது நான்காம் பொலிவுப் பரிமாணத்தைக் கொண்ட விண் மீனாகும். இதைச் சுற்றி, அழகு வாய்ந்த விண் மீன் கூட்டங்கள் வட்டமிடுகின்றன. —எம். அரவாண்டி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 583)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac8zyntc/
தமிழ்“சுளகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ac8zyntc/APA
Oliyon Research. (2026). சுளகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac8zyntc/MLA
"சுளகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ac8zyntc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment