தமிழிலுள்ள விரிவு நிகண்டு என்னும் நூலினை இயற்றியவர். இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவ நல்லூரைச் சேர்ந்தவர். இவர் எழுதிய நிகண்டு நூல் எதுகை முறையில், விருத்தப்பாவினால் அமைந்துள்ளது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட செய்யுள்களைக் கொண்டது. இது சூடாமணி நிகண்டினை அடிப்படையாகக் கொண்டது. உலக வழக்குச் சொற்கள் பலவற்றைக் குறிப்பாக நெல்லைப் பகுதியில் வழங்கும் வழக்குச் சொற்களை இவர் தம் நூலில் சேர்த்துள்ளார்.