சிறு தக்காளி
ciṟu takkāḷi
இதன் வேறு பெயர்கள் பிள்ளைத் தக்காளி, நெய்த் தக்காளி, பேய்த் தக்காளி, எருமைத் தக்காளி என்பன.
இதன் வேறு பெயர்கள் பிள்ளைத் தக்காளி, நெய்த் தக்காளி, பேய்த் தக்காளி, எருமைத் தக்காளி என்பன. இதன் தாவரப் பெயர் ஃபைசாலிஸ் மினிமா (Physalis minima) என்பதாகும். சிறு தக்காளியைச் சாலையோரங்கள், வயல் வெளிகள், மரம், புதர் இவற்றின் நிழலடியிலும், நெல் வயல் கரைகளிலும் களையாகக் காணலாம். இதுவும் மணத் தக்காளியைப் போன்ற ஒரு பருவச் செடியாகும். இது விதை மூலம் இனப் பெருக்கம் அடைகிறது. இது நன்கு கிளைத்து, 45 செ.மீ. உயரம் வளரும். வேர் தரை மட்டத்திற்கு அருகிலேயே காணப்பட்ட போதும் நன்கு கிளைத்துப் பரவியிருக்கும்.
இச்செடி ஓரளவு நீர் தேங்கியிருக்கும் பகுதியிலும் வளரும். தண்டு கோணங்களுடன் பிசு பிசுப்பான சுணையையும் பெற்றிருக்கும். தனித் தனி இலைகள் மாற்றடுக்கத்தில் உண்டாகியிருக்கும். இலையடிச் செதில்கள் இல்லை. இலைகள் முட்டை வடிவாகவும், இலை நுனி கூராகவும் இருக்கும்.
இலை மேல் மற்றும் கீழ்ப் பரப்பில் தண்டிலுள்ளது போன்றே சுணை கலப்பாகக் காணப்படும். காம்பருகு இலைப் பகுதி சமமாக இருப்பதில்லை. இலை ஓரம் உள்ளடங்கிய பல் போன்ற அமைப்பைக் (sinuate dentate) கொண்டிருக்கும். சிறிய தனித் தனிப் பூக்கள் இலைக் கக்கத்தில் மஞ்சள் நிறத்தில் தோன்றும், பூக்காம்பு முதலில் சிறுத்திருக்கும். இது வளர்ந்து, காய் உண்டாகும் போது நீளமாகும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> புல்லி வட்டம் கிண்ண வடிவில் ஐந்து முக்கோண வடிவப் பற்களைக் கொண்டிருக்கும். புல்லி வட்டம் விழாமல் கனி வளரும் போது, பெருத்துக் கொண்டே வரும். அல்லி வட்டம் மணி வடிவிலும், 6 மி.மீ. குறுக்களவைக் கொண்டும் இருக்கும். மகரந்தக் கேசரங்கள் ஐந்து அல்லி வட்டத்தில் இணைந்திருக்கும். மகரந்தப் பைகள் இரண்டு கதுப்புகளைக் கொண்டிருக்கும். இவை நீள வாக்கில் வெடிக்கும்,
மேல் மட்டச் சூல்பை. முட்டை வடிவானது. வட்டத் தகட்டின் மீது அமைந்திருக்கும். சூல் பையில் இரண்டு திசுவறைகள் பல சூல்களுடன் காணப்படும். சூல் முடி காண முடியாத அளவிற்கு இரண்டாகப் பிரிந்திருக்கும். கனி மஞ்சளான சதைக் கனியாகும். இந்தச் செடியில் கனி வளரும்போது, புல்லி இதழ்கள் நிலைத்திருந்து, விரைவாக வளர்ந்து, காற்று நிறைந்த பெரிய பை போல் கனியைத் தளர்ச்சியாக மூடிக் கொண்டிருக்கும், கனி 1.25 செ.மீ. குறுக்களவைக் கொண்டிருக்கும். சிறு சிறு விதைகள் தட்டையாக வட்டத் தகடு வடிவத்தில் இருக்கும். ஒரு செடியில் ஏறக் குறைய 15000 விதைகள் உற்பத்தியாகும். மண்ணீரல் பருத்திருப்பதற்கும், மகோதரம் என்னும் நீர்க் கோவைக்கும் இது சிறந்த மருந்தாகும். —கோ. அர்ச்சுணன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 343)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a78mp39v/
தமிழ்“சிறு தக்காளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a78mp39v/APA
Oliyon Research. (2026). சிறு தக்காளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a78mp39v/MLA
"சிறு தக்காளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a78mp39v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment