அருத்தாபத்தி
aruttāpatti
இந்தியத் தத்துவவாதிகள் பொருள்களைப் பற்றி உள்ளது உள்ளபடியான அறிவைப் பெறப் பத்து வழிகள் அல்லது கருவிகள் உள்ளன என ஆராய்ச்சியின் மூலம் முடிவு செய்துள்ளனர்.
இந்தியத் தத்துவவாதிகள் பொருள்களைப் பற்றி உள்ளது உள்ளபடியான அறிவைப் பெறப் பத்து வழிகள் அல்லது கருவிகள் உள்ளன என ஆராய்ச்சியின் மூலம் முடிவு செய்துள்ளனர். அக்கருவிகள் தமிழில் அளவைகள் எனப்படும். வடமொழியாளர் அவைகளைப் பிரமாணங்கள் எனக் கூறுவர். பத்து அளவைகளில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்படுவது அருத்தாபத்தி என்பதாகும். அதைத் தமிழில் பொருளளவை என்பர் தருக்க நூல் வல்லுநர்.
மீமாம்சகர், சங்கர வேதாந்திகள், புராணிகர், தந்திரவாத மதத்தினர் ஆகியோர் அருத்தாபத்தியை ஓர் இன்றியமையாத அளவையாக ஏற்றுக் கொள்கின்றனர். மற்றவர் அதை அனுமான அளவையிலேயே அடக்கி விடுவர்.
அருத்தாபத்தி என்பதற்கு ஊகம் என்பது பொருள். முன்பு அறியப்படாததொரு உண்மையை ஊகத்தின் வாயிலாக உணர்வதே அருத்தாபத்தி எனப்படும். ஒன்றுக்கொன்று ஒவ்வாதது போல் காணப்படும் இரண்டு உண்மைகளின் ஒவ்வாமையை நீக்குவதற்காக முன் அறியப்படாததோர் உண்மையை ஊகிப்பது அருத்தாபத்தி முறை, தேவதத்தன் உயிரோடிருக்கிறான். ஆனால், அவன் தன் வீட்டில் இல்லை என்றால் அவன் வெளியே சென்றிருக்கிறான் என ஊகத்தால் அறிகிறோம். தேவதத்தன் உயிரோடியிருப்பது வீட்டில் இல்லாதிருப்பது ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், அவைகளிடையே ஒவ்வாமை காணப்படுகிறது. ‘அவன் வெளியே சென்றிருக்கிறான்’ என்று ஊதிப்பதால் ஒவ்வாமை நீங்கிப் பொருள் விளக்கம் பெறுகிறது. அதேபோலப் பீமன் பருத்தும் கொழுத்தும் காண்கிறான். ஆனால், அவன் பகல் வேளையில் உண்பதில்லை என்றால் அவன் இரவில் பேருணவு உண்ணுகிறான் என்று ஊகிப்பதால் ‘கொழுத்திருப்பது’ ‘பகலில் உண்ணாதிருப்பது’ ஆகிய இரண்டிற்குமிடையே உள்ள ஒவ்வாமை அகன்று விடுகிறது. அவன் பகலில் உண்ணாமலிருந்தும் கொழுத்திருப்பதின் காரணம் தெளிவாகப் புரிகிறது. எனவே, அறியப்பட்ட உண்மைகளில் காணப்படும் ஒவ்வாமையை நீக்கிப் பொருளை விளங்க வைப்பதே அருத்தாபத்தியின் நோக்கமாகும்.கூ.ரா.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 817)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4r2npn5/
தமிழ்“அருத்தாபத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a4r2npn5/APA
Oliyon Research. (2026). அருத்தாபத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4r2npn5/MLA
"அருத்தாபத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a4r2npn5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment