அந்தராத்து
antarāttu
இலட்சத்தீவுகள், மினிகாய், அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு.
இலட்சத்தீவுகள், மினிகாய், அமின்திவி ஆகிய தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. உப்பங்கழியற்ற இத்தீவின் இடையே நீர்த்தேக்கமுள்ள வட்டவடிவமான பவழப்பாறையொன்று தீவு முழுவதையும் கவர்ந்துள்ளது. வடகிழக்கு ஓரத்தில் உள்ள தட்டையான பவழப்பாறையைத் தவிர்த்து, வட்டவடிவமான இத்தீவு முழுமையும் ஓதத்தின் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இதன் வடபக்கத்தில் சிறு படகுத்துறையொன்று இருந்தது. அதனை 1909–ஆம் ஆண்டில் உடைத்துத் தகர்த்து விட்டார்கள். படகுத் துறையைச் சுற்றிலும் போக்குவரத்திற்குப் பயன்படும் படகுகளை நிறுத்தப் பெரிய சாவடிகள் கட்டப்பெற்றுள்ளன. இத்தீவுமக்கள் இசுலாம் சமயத்தவர்களாகி விட்டனர். இன்றும் அவர்கள் முசுலிம்களாகவே வாழ்கிறார்கள். இத்தீவு கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் சீரிய இடத்தைப் பெற்றுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 373)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a3rydyur/
தமிழ்“அந்தராத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a3rydyur/APA
Oliyon Research. (2026). அந்தராத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a3rydyur/MLA
"அந்தராத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a3rydyur/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment