சீத்தலைச் சாத்தனார்

cīttalaic cāttaṉār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் கடைச்சங்க காலத்தவர். இவரது இயற்பெயர் சாத்தனார் என்பது. சீத்தலை என்னும் ஊரினர் என்பதனால் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார். பிறர் செய்யுளில் குற்றம் கண்டபோது தம் தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக்குத்திச் சீழ் ஒழுகும் தலையிலையுடையராய் இருந்த காரணத்தால் சீழ்த் தலைச் சாத்தனார் என்று கூறப்பட்டு நாளடைவில் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார் என்றும் கூறுவர். மதுரையில் தான்யங்களை விற்று வந்த வணிகத் தொழிலாளர். அது காரணமாக மதுரைக் கூலவாணிகச் சீத்தலைச் சாத்தனார் என்றும் கூறப்பட்டவர். இளங்கோ அடிகளாரின் நண்பர். பெளத்த மதத்தினர். இவர் செய்த நூலே மணிமேகலை என்பது. இதுவே அன்றி, அகத்தில் ஐந்தும், குறுந்தொகையில் இரண்டும், நற்றிணையில் மூன்றும், புறத்தில் ஒன்றும், திருவள்ளுவ மாலையில் ஒன்றும் ஆகப் பன்னிரண்டு பாடல்களும் இவரால் பாடப்பட்டுள்ளன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 592)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a37z6dtm/

தமிழ்
“சீத்தலைச் சாத்தனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a37z6dtm/
APA
Oliyon Research. (2026). சீத்தலைச் சாத்தனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a37z6dtm/
MLA
"சீத்தலைச் சாத்தனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a37z6dtm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment