அலபாமா
alapāmā
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம், அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் 22–ஆம் மாநிலமாகும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாநிலம், அந்நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் 22–ஆம் மாநிலமாகும். மிசிசிப்பி ஆற்றுக்குக் கிழக்கே இம்மாநிலம் அமைந்துள்ளது. அலபாமாவின் (Alabama) வடக்கில் தென்னசிப் பள்ளத்தாக்கும், தெற்கில் புளோரிடாவும் மெக்சிகோ வளைகுடாவும், கிழக்கில் சார்சியாவும், மேற்கில் மிசிசிப்பியும் எல்லைகளாக உள்ளன. அலபாமாவை அப்பலேச்சிய நாடு (Appalachian State) என்றும் வளைகுடா நாடு (Gulf State) என்றும் அழைக்கிறார்கள்.
இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 1,33,667 ச.கி.மீ. கி.பி. 1980–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி அலபாமாவின் மக்கள் தொகை 38,93,888 ஆகும்.
இம்மாநிலத்தை உள்நாட்டுத் தாழ்ந்த மேட்டு நிலப்பகுதி, அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, வளைகுடாக் கடற்கரைச் சமவெளி என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
உள்நாட்டுத் தாழ்ந்த மேட்டுநிலப்பகுதி: இம்மாநிலத்தின் வடமேற்கே அமைந்துள்ளது, இதன் வழியாகத் தென்னசி மாநிலத்திற்குச் செல்லலாம். இந்நிலப்பகுதியில் கனோபி (Knobby) குன்றுகள் உள்ளன. இக்குன்றுகளின் குறுக்காகத் தென்னசி ஆற்றின் அகலமான சமவெளி உள்ளது. அப்பலேச்சிய மேட்டு நிலப்பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்பிரிவுகள் அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, அப்பலேச்சிய மலைப்பகுதியும் சமவெளியும், பீட்மாண்டு மேட்டுநிலப்பகுதி என்பனவாகும். அப்பலேச்சிய மேட்டுநிலப்பகுதி, கம்பர்லாந்து மேட்டுப்பகுதி என்றும் சொல்லப்படும். வேளாண்மைக்கு உகந்த நிலங்களைக் கொண்டு விளங்கும் இப்பகுதியில், மரம் வெட்டும் தொழிலும் சுரங்கத்தொழிலும் சிறப்பானவை. அப்பலேச்சிய மலைப்பகுதி, சமவெளிப் பகுதியில்
அலபாமா
சுரங்கங்கள் மிகுதியாக உள்ளன. இப்பகுதியிலுள்ள காடுகளில் ஒக், பைன் போன்ற மரவகைகள் மிகுதியாக உள்ளன.
பீட்மாண்டு மேட்டுநிலப் பகுதியில் பொதுவாக மலைகள் காணப்படுகின்றன. பீட்மாண்டு என்பதற்கு அடிப்பகுதி அல்லது மலை அடிவாரம் என்பது பொருள். வளைகுடா கடற்கரைச் சமவெளிப்பகுதியாகும். பல ஆண்டுகளாக இப்பகுதி பருத்தி விளைகின்ற பகுதியாக இருந்து வந்தது. ஆனால் இக்காலத்தில் இப்பகுதி, கால்நடைகளின் மேய்ச்சல் புல்வெளிகளாகவும் விளைச்சல் நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.
தென்னசி ஆறு, அதனுடன் கலக்கும் ஒகையோ ஆறு, மொபைல் ஆறு, தாம்பிக்கு ஆறு, பிளாக்வாரியர் ஆறு, கூசா (Coosa), தாலபூசா (Talla Poosa), அலபாமா ஆறு, சாட்டேகோச்சி ஆறு போன்றவை இம்மாநிலத்தில் பாயும் ஆறுகளாகும். இங்குள்ள ஏரிகளுள் மிகப்பெரிய ஏரி குண்டர்சுவில்லி ஏரியாகும்.
அலபாமா மாநிலச்சின்னம்
அலபாமா மிதமான தட்பவெப்பநிலை கொண்டது; மழை ஆண்டொன்றுக்கு 135 செ.மீ. முதல் 165 செ.மீ. வரை பெய்கிறது.
நிலக்கரி, சுண்ணாம்புக்கல் போன்றவை இம்மாநிலத்தில் கிடைக்கின்ற கனிப்பொருள்களாகும்.
சோயாபீன்சு, பருத்தி, பயறு வகைகள் பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி, கோதுமை போன்றவை இங்கு விளைகின்றன.
அலபாமாவின் பெரும்பான்மையான மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கோழி வளர்ப்பினால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கால்நடை வளர்த்தல், பன்றி வளர்த்தல், பால் உற்பத்தி போன்ற பிறதொழில்களின் மூலமும் இம்மாநிலத்தின் வருமானம் சீராகப் பெருகியுள்ளது.
நூற்பு ஆலைகளும் உலோகத் தொழிற்சாலைகளும் இரசாயன உற்பத்தித் தொழிலகங்களும் காகி- தத் தொழிற்சாலைகளும் நாட்டின் பிற தொழிற்சாலைகளாகும்.
1,40,000 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இருப்புப்பாதை வழிகளும் இம்மாநிலத்தின் பெரு நகரங்களை இணைக்கின்றன. இம்மாநிலத்தில் 7240 கி.மீ. நிலத்திற்கு இருப்புப்பாதைகள் போடப்பட்டுள்ளன. முதன்முதலில் கி.பி. 1832–ஆம் ஆண்டு தெகாடூருக்கும் (Decatur) மசில் சோல்சிற்கும் (Muscle Shoals) இடையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது. விமான நிலையங்கள் மாநிலத்தின் சிறப்பான நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அலபாமாவிலுள்ள ஆறுகள் ஆற்றுப் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுகின்றன. இம்மாநிலத்தின் துறைமுக நகரம் மொபைல் (Mobile) ஆகும். மொபைலிலிருந்து பிற நாடுகளுக்குப் பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. பிறநாடுகளிலிருந்தும் பொருள்கள் இத்துறைமுகத்தின் வழியாக இறக்குமதியாகின்றன.
செவ்விந்தியர்கள் எனப்படும் பழங்குடி மக்களே இங்கு முதன் முதலில் வாழ்ந்து வந்தனர். கி.பி. 1702–ஆம் ஆண்டு அலபாமா பிரெஞ்சுக் குடியேற்ற நாடாயிற்று. அப்போது இது இலூசியானாவின் ஒரு பகுதியாகச் செயற்பட்டு வந்தது. ஆங்கிலேயர் கி.பி. 1817–ஆம் ஆண்டு அலபாமாவைத் தங்களது குடியேற்றமாக அமைத்தனர். கி.பி. 1819–ஆம் ஆண்டு திசம்பர் 14–ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இப்பகுதி
அலபாமாச் சட்டமன்றம்
இணைக்கப்பட்டு ஒரு மாநிலமானது. இங்கு வாழும் மக்களுள் பெரும்பாலோர் 19–ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள். நீக்கிரோ இன மக்களும் இம்மாநிலத்தில் வசிக்கின்றனர்.
இங்கு உயர் கல்வி நிலையங்களும் கல்லூரிகளும் உள்ளன. அலபாமா பல்கலைக்கழகம் இம்மாநிலத்தின் தொன்மையான பல்கலைக் கழகமாகும். இப்பல்கலைக்கழகம் தசுகலூசா (Tuscaloosa) என்னும் இடத்தில் உள்ளது. கி.பி. 1890–ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழம் நிறுவப்பட்டது.
‘மான்ட்கோமரி’ என்னும் நகரம் இம்மாநிலத்தின் தலைநகரமாகும். இங்குப் பல கல்வி நிலையங்கள் உள்ளன.
பர்மிங்காம் அலபாமாவிலுள்ள மிகப் பெரிய நகரமாகும். மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள நகரமும் இதுவே. இந்நகரத்தில் பல தொழிற்சாலைகள் உள்ளன.
மொபைல் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகவும் அலபாமாவின் ஒரே துறைமுக நகரமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பிற நாடுகளிலிருந்து இறக்குமதியும் இத்துறைமுகத்தின் வழியாக நடைபெறுகிறது. இந்நகரம் அலபாமாவின் நுழைவு வாயில் என அழைக்கப்படுகின்றது. இங்குக் கப்பல் தளங்களும் பல்வேறு தொழிற்சாலைகளும் உள்ளன.
இயற்கைப் பிரிவுகள்
அன்சுவிலி (Huntsville), தசுகலூசா (Tuscaloosa), காட்சுடன் (Gadsden), தோதான் (Dothan) ஆகியவை பிற நகரங்களாகும்.
அலபாமா சட்டமன்றம், ‘செனட்’ எனப்படும் மேலவையையும் ஒரு பிரதிநிதித்துவ அவையையும் கொண்டிலங்குகிறது. இதன் உறுப்பினர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். செனட் அவை 35 உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவ அவை 105 உறுப்பினர்களையும் கொண்டு செயற்படுகின்றன. மாநிலத்தின் தலைமை நிருவாகத்தை ஆளுநர் கவனிக்கிறார். இவர் 4 ஆண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆளுநருக்கு உதவியாக ஒரு துணை ஆளுநரும் இருக்கிறார்.
அலபாமாவின் இன்றைய அரசியலமைப்பு 1901–ஆம் ஆண்டு வரையப்பட்டது.
மாநிலத்தின் தலைமை நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் எட்டு இணை நீதிபதிகளையும் கொண்டுள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 864)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a26hbrwy/
தமிழ்“அலபாமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a26hbrwy/APA
Oliyon Research. (2026). அலபாமா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a26hbrwy/MLA
"அலபாமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/a26hbrwy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment