இலக்கண மாற்றம்
ilakkaṇa māṟṟam
இலக்கண மாற்றம் என்பது இலக்கண அமைப்பின் ஒரு பகுதியாகிய இலக்கண மையத்தில் (Grammatical core) காலப்போக்கில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
இலக்கண மாற்றம் என்பது இலக்கண அமைப்பின் ஒரு பகுதியாகிய இலக்கண மையத்தில் (Grammatical core) காலப்போக்கில் ஏற்படும் மாற்றம் ஆகும். இலக்கண அமைப்பு என்பது மொழியின் அக அமைப்புப் பிரிவுகளாகிய ஒலியனியல் அமைப்பு (Phonological system), இலக்கண அமைப்பு (Grammatical system), உருபொலியனியல் அமைப்பு (Morphophonemic system) என்ற மூன்றனுள் ஒன்று.
சொல்வகை (Parts of Speech), சொற்றொடர்கள் (Constructions), இலக்கணக் கூறுகள் (Grammatical categories), செயலிகள் ஆகிய உட்கூறுகளால் அமையப்பெற்றது இலக்கண மையம் ஆகும். இலக்கண மையத்தின் இந்த உட்கூறுகளில் ஏற்படும் மாற்றமே இலக்கண மாற்றமாகக் (Grammatical change) கருதப்பெறும்.
பழந்தமிழில் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருள் வேற்றுமையாகச் செயற்பட்டது. பிற்காலத்தில் இது நீங்கற்பொருள் வேற்றுமையாகச் செயற்பட்டு வருகிறது. இலக்கணக் கூறுகளுள் ஒன்றாகிய வேற்றுமையில் ஏற்படும் மாற்றம் இவண் இலக்கண மாற்றமாகக் கருதத்தக்கது. மேலும், படர்க்கைப் பலர்பால், இக்காலத் தமிழில் ஆண்பால் பன்மை (அவனுக), பெண்பால் பன்மை (அவளுக) என வழங்கப்பெறுவதும் இலக்கண மாற்றத்தின் பாற்படும்.
வடமொழியிலிருந்து ‘காரன்’ என்னும் விகுதி கடன் வாங்கப்பெற்று ‘வீட்டுக்காரன்’, ‘தோட்டக்காரன்’ எனப் புதிய ஆக்கச் சொற்கள் தமிழில் வழங்குகின்றன. செயலிகளின் ஒரு உட்கூறாகிய ‘காரன்’ என்னும் சொல்லாக்க விகுதியைப் (Derivational suffix) பயன்படுத்திப் புதிய சொல்லாக்கம் அமையப்பெறுவதும் இவக்கண மாற்றமாகும். ஏ.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 281)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9stz629s/
தமிழ்“இலக்கண மாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9stz629s/APA
Oliyon Research. (2026). இலக்கண மாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9stz629s/MLA
"இலக்கண மாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9stz629s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment