செவுள்
cevuḷ
விலங்குகள் நீரில் மூச்சு விடுவதற்குச் செவுள் (gill) பயன் படுகிறது.
விலங்குகள் நீரில் மூச்சு விடுவதற்குச் செவுள் (gill) பயன் படுகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை உறிஞ்சிக் கொண்டு, கார்பன் டைஆக்சைடை வெளியே விடுவதற்கேற்பச் செவுள் அமைந்துள்ளது. நீரிலுள்ள பல சிறு விலங்குகளின் சுவாசம், அவற்றின் மேற்பரப்பின் வாயிலாகவே நடைபெறுகிறது. உயிரின விலங்குகளில், அவற்றின் உடலின் குறிப்பிட்ட சில உறுப்புகளில் சுவாசம் நடைபெறும். சுவாசத்திற்குப் பயன் படும் செவுள் அகன்ற, மெல்லிய மேற்பரப்பைக் கொண்டது. இது குச்சம் போன்ற நீட்சிகளாகவோ, மெல்லிய தகடுகள் போலவோ இருக்கும்.
நீரில் வாழும் சில பூச்சிகளைத் தவிர, ஏனைய நீர் வாழ் விலங்குகளின் செவுள்களில் குருதி அல்லது நிணம் போன்ற சாறு பாயும். கடல் நட்சத்திரங்களில், அவற்றின் நீர்க் குழாய் மண்டலத்திலிருந்து உடலின் மேற்பரப்பில் காணப்படும் புடைப்புகளே செவுள்களாக உள்ளன. முதுகெலும்புகளின் செவுள்கள் தொண்டையின் சுவர்களில் வளர்கின்றன. அங்கு பக்கத்துக்கு ஒரு வரிசையாக அமைந்த செவுள் பிளவுகள், வெளியே திறக்கின்றன. வாயின் வழியாகத் தொண்டைக்குள் செல்லும் நீர், செவுள்களை நனைத்துக் கொண்டு, செவுள் பிளவுகள் வழியாக வெளியேறும்.
மீன்களின் செவுள் முதிர்ச்சி வெவ்வேறு நிலைகளில் காணப் படுகிறது. சில நீர்–நில வாழ் உயிரிகளின் செவுள்கள், உடலுக்கு வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. சிலவற்றுள் இளவுயிரி நிலையிலேயே செவுள்கள் இருக்கும். செவுளில் செவுள் இழை, செவுள் தகடு, செவுள் முள் எனப் பல பகுதிகள் உண்டு.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —அர. கமலதியாகராசன்
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 914)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rt4cuer/
தமிழ்“செவுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rt4cuer/APA
Oliyon Research. (2026). செவுள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9rt4cuer/MLA
"செவுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rt4cuer/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment