அர்ஜுனர்
arjuṉar
அர்ஜுனர் (? 1606) அமிருதசரசில் இருந்த சீக்கிய மதகுரு.
அர்ஜுனர் (? 1606) அமிருதசரசில் இருந்த சீக்கிய மதகுரு. இராமதாசர் என்னும் குருவின் குமாரர். இவர் 1581-1606 வரை மதகுருவா யிருந்தார் ; அமிருதசரசில் சீக்கியர்களுடைய பொற்கோவிலைக் கட்டி முடித்தார். 1604-ல் சீக்கியப் புண்ணிய நூலாகிய ஆதிகிரந்தம் எழுதிப் பூர்த்தி செய்யப்பட்டது. இவர் காலத்தில் சீக்கிய மதம் அதிகமாகப் பரவத் தொடங்கிற்று. இவர் பிற மதத்தவர்களை அவமதிப்பதாகச் சிலர் அக்பரிடம் குறை கூறினர்; ஆயினும் அப்பேரரசன் அதைப் பொருட்படுத்தவில்லை. ஜகாங்கீருக்கும் அவன் மகன் குஸ்ருவிற்கும் நடந்த தகராற்றில் குஸ்ருவின் நிலைக்கு வருந்திய அர்ஜூனர் ரூபாய் 5.000 அவனுக்கு உதவியளித்தார் (1606). இதனால் சினமடைந்த ஜகாங்கீர் குஸ்ருவை யடக்கிய பிறகு அர்ஜுனருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தான். அர்ஜூனரின் சீடர்கள் அத்தொகையை யளித்துவிட முன்வந்தார்களாயினும் குரு அதற்கு இணங்கவில்லை. ஆகையால் ஜகாங்கீர் குரு அர்ஜுனரை லாகூரில் சித்திரவதை செய்து கொல்லுவித்தான். தே. வெ. ம.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 184)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qxdrvn9/
தமிழ்“அர்ஜுனர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qxdrvn9/APA
Oliyon Research. (2026). அர்ஜுனர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9qxdrvn9/MLA
"அர்ஜுனர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qxdrvn9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment