அயினு
ayiṉu
சப்பானின் பழங்குடிகள். இன்றும் ஏறக்குறைய 20 ஆயிரம் அயினு (Ainu) மக்கள் வாழ்கிறார்கள்.
சப்பானின் பழங்குடிகள். இன்றும் ஏறக்குறைய 20 ஆயிரம் அயினு (Ainu) மக்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் ஓகடைடோ தீவில் வசிக்கின்றனர். ஓகடைடோ சப்பானின் வட கோடியில் இருக்கும் பெரும் தீவாகும். கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரை அயினுக்களில் சிலர் சகாலின், குரைல் தீவுகளில் வாழ்ந்தனர். அத்தீவுகள் இப்போது உருசியாவிற்குச் சொந்தமாகிவிட்டன. அவர்களுடைய தொடக்கம் பற்றிய விவரங்கள் கிடைத்தில. இப்பழங்குடிகளின் தோற்றம், மொழி, பண்பாடு ஆகியன நீண்ட காலமாக ஐயப்பாடாகவே இருந்து வந்தன. காக்கசாயிடு மக்களின் தோற்றத்தைப் பெற்றுள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சிக் குறிப்புகளின் வாயிலாக இம்மக்கள் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் காக்கசாயிடு பகுதியின் வடகிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர் என்பது தெரிய வருகிறது. அயினு பழங்குடிகளில் ஒரு சில குழுவினர் குறில் தீவுகளிலும் உருசியத் தீவுகளில் ஒன்றான சக்காலின் தீவிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அக்காய்டு என்ற பகுதியே இவர்களின் தாயகமாகவும் இருந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றால் வாழ்ந்துவந்த இம்மக்களின் வாழ்க்கைமுறை இப்போது மாற்றம் அடைந்து, சப்பானிய மக்களின் வாழ்வோடு இணைந்து காணப்படுகிறது. இவர்களின் வீடுகள் மரபு வழியில் கூரையால் வேயப்பட்டு ஒரே ஒரு அறையினைக் கொண்டவை. புனித சன்னல் என்று கூறப்படும் ஒரு சன்னல் வீட்டின் பின்புறமும், மேற்- குப் புறத்தில் ஒரு கதவும் இவ்வீடுகளில் காணப்படுகின்றன. தேர்ந்த தொழில் நுட்ப வல்லவர்களான அயினு பழங்குடிகள் பிரார்த்தனைக் குச்சிகளை ஒவ்வோர் இல்லங்களிலும் வைத்திருக்கின்றனர். இதனை இம்மக்கள் புனிதமான அடையாளமாகக் கொள்கின்றனர். இவ்வினப் பெண்களுக்கு வாயைச் சுற்றிப் பரந்த அளவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது. சப்பானிய அரசு இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தப் பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 595)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9mpya2ks/
தமிழ்“அயினு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9mpya2ks/APA
Oliyon Research. (2026). அயினு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9mpya2ks/MLA
"அயினு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9mpya2ks/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment