அயான்
ayāṉ
அயான் (Ion) :மின்னேற்றங்கொண்ட அணுவோ, அணுத்தொகுதியோ அயான் என்று அழைக்- கப்படுகிறது.
அயான் (Ion) :மின்னேற்றங்கொண்ட அணுவோ, அணுத்தொகுதியோ அயான் என்று அழைக்- கப்படுகிறது. அணுக்கள் எதிரான ஏற்றங்கொண்ட இரு பகுதிகளால் ஆனவை. இவ்விரு ஏற்றங்களும் சமமாக இருப்பதால் அணுவில் நிகர மின்னேற்றம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் ஓர் அணுவானது எலெக்ட்ரான்களை ஏற்றுலோ, இழந்தாலோ, மின்னேற்றங்கொண்டதாகிறது. இவ்வாறு அது அயானாகிறது. சாதாரணமாக எல்லா உலோகங்களும், ஹைடிரஜனும் எலெக்ட்ரான்களை இழந்து நேரயான்கள் ஆகும். அலோகங்களும், படிமூலங்கள் என்ற அணுத் தொகுதிகளும் பொதுவாக எலெக்ட்ரான்களை ஏற்று எதிரயான்கன் ஆகும்.
சில திரவங்களிலும், கரைவுகளிலும், நேரயான்களும், எதிரயான்களும் வெவ்வேறாகப் பிரிகின்றன. இவ்விளைவு அயானாதல் எனப்படும். இத்தகைய திரவங்கள் மின்சாரத்தைக் கடத்தி, மின்பகுப்பு (த.க.) என்ற விளைவைத் தோற்றுவிக்கும்.
வாயு மூலக்கூறுகளிலுள்ள சில எலெக்ட்ரான்களை விடுவித்தல், வாயுக்களை அயானாக்கல் எனப்படும். சுடரிலுள்ள வாயுக்களில் இவ்விளைவு நேரலாம். அல்லது புறவூதாக்கதிர்கள், எக்ஸ்-எலெக்ட்ரான்களாலோ, கதிர்களைப்போன்ற சக்தி வாய்ந்த கதிர்ப்புக்களாலோ மூலக்கூறுகளைத் தாக்கி இவ்விளைவை நிகழ்த்தலாம். சாதாரணமாக மின்சாரத்தைக் கடத்தாத வாயுவும் அயானானபின் அதைக் கடத்தும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 178)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kssn3va/
தமிழ்“அயான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kssn3va/APA
Oliyon Research. (2026). அயான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9kssn3va/MLA
"அயான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kssn3va/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment