அல்சேசு–லோரென்
alcēcu–lōreṉ
செருமனிக்கும் சுவீடனுக்கும் எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பிரெஞ்சு மாநிலங்கள்; கனிவளம் செறிந்தவை.
செருமனிக்கும் சுவீடனுக்கும் எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பிரெஞ்சு மாநிலங்கள்; கனிவளம் செறிந்தவை. நிலக்கரி இரும்பு ஆகியவை இங்கு நிறையக் கிடைக்கின்றன. கி.பி. 17–ஆம் நூற்றாண்டிலிருந்து பிரான்சுக்கும் செருமனிக்கும் இவ்விரு மாநிலங்களும் தீராத தொல்லைகளைத் தந்து வத்தன. லோரென் (Lorraine) புனித உரோமானியப் பேரரசுப் பகுதியாயிருந்து, 13–ஆம் நூற்றாண்டில் பிரான்சின் செல்வாக்கிற்கு உட்பட்டு, 16–ஆம் நூற்றாண்டில் சட்ட பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கி.பி. 18–ஆம் நூற்றாண்டு வரை லோரென் தன்னாட்சிப் பகுதிக்கான தகுதியைப் பெற்றிருந்தது. பிரெஞ்சு மன்னர் பதினைந்தாம் லூயியின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் இப்பகுதி முடியாட்சிக்கு உட்பட்டது.
அல்சேசு (Alsace) 17–ஆம் நூற்றாண்டு வரை புனித உரோமானியப் பேரரசின் ஒரு பகுதியாயிருந்தது. ஓரளவு தன்னாட்சி பெற்றிருந்த போதிலும், அல்சேசு செருமானியப் பண்பாடு, நிறுவனங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாயிருந்தது. கி.பி. 1648–ஆம் ஆண்டில் முடிவுற்ற வெசுட்பேலியா உடன்படிக்கையின்படி முப்பதாண்டுப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதோடு, அல்சேசு மாநிலம் பிரான்சுக்குக் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அல்சேசு மக்கள் செருமானியப் பழக்க வழக்கங்கள், மொழி ஆகியவற்றைப் பேணிக் காத்ததோடு, பேரரசு கொடுத்திருந்த
அல்சேசு லோரென்
சிறப்பதிகாரங்களையும் உரிமைகளையும் மதித்து வந்தது. இச்சிறப்புரிமை கி.பி. 1789–ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக் காலம்வரை நீடித்தது. அதற்குப்பின்னர் அல்சேசும் லோரெனும் பண்பாட்டிலும் அரசியலிலும் ஒன்றுபட்டுத் திகழ்ந்தன. கி.பி. 1870–71 பிரெஞ்சுப் பிரசியப் போருக்குப் பின்னர், இவ்விரு மாநிலங்களும் செருமானியப் பேரரசின் பகுதிகளாக்கப்பட்டன. முதல் உலகப் போரின்போது செருமனி, அல்சேசு–லோரென் பகுதிகளை நம்பாமல் பகையுணர்ச்சியோடு நோக்கியது. வேர்சே உடன்படிக்கையின்படி இவ்விரு மாநிலங்களையும் பிரான்சு பெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது செருமனிக்கு இவ்விரு மாநிலங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் 1945–இல் செருமனி தோல்வியுற்ற போது அல்சேசு–லோரென் ஆகிய இரண்டும் மீண்டும் பிரான்சுக்கே கொடுக்கப்பட்டன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 844)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jkfthag/
தமிழ்“அல்சேசு–லோரென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9jkfthag/APA
Oliyon Research. (2026). அல்சேசு–லோரென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jkfthag/MLA
"அல்சேசு–லோரென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9jkfthag/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment