சென்னாக் கூனி
ceṉṉāk kūṉi
சுடின ஓட்டுக் கணுக்காலி (crustacea) வகையைச் சேர்ந்த கடல் வாழ் சென்னாக் கூனி, இறாலைப் போன்று வளைந்த உடலையுடையது.
சுடின ஓட்டுக் கணுக்காலி (crustacea) வகையைச் சேர்ந்த கடல் வாழ் சென்னாக் கூனி, இறாலைப் போன்று வளைந்த உடலையுடையது. உணர் கொம்புகள், கால்கள் போன்ற தொங்குறுப்புகள் இறாலில் உள்ளவை போலவே காணப் படுகின்றன. 2–2.5 செ.மீ. நீளமேயுள்ள இதைச் சிற்றிறால்(shrimp) என்று குறிப்பிடுவர். இதன் இளவுயிரி மிகச் சிறியது. அசெட்டிஸ் (acetes) என்னும் இனம் இந்தியாவின் கிழக்குக் கரை, பர்மா, மலேயாத் தீவுக் கூட்டம் ஆகியவற்றின் மேற்குக் கரைப்பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சென்னாக் கூனி கடலில் வாழும் மிதவை நுண்ணுயிரிகளைத் (plankton) தின்று வாழ்கிறது. இறந்து போன விலங்குகளை அரித்தும் தின்கிறது. இது சிறிதாக உள்ளமையால், கடல் நீரோட்டங்களால் கரையை நோக்கி வாரிக் கொண்டு வரப் படுகிறது.
உயிரினங்களில் காணப்படும் உணவுத் தொடரில் (food chain) சென்னாக் கூனி முக்கிய பங்கு வகிக்கிறது. இது மிக நுண்ணிய மிதவையுரியை உண்டு வாழ்கிறது. இதைச் சிறு மீன்கள் விழுங்குகின்றன. மிதவையுயிரிகளுக்கும், சிறு மீன்களுக்கும் இடையே சென்னாக் கூனிகள் சிறப்பான இணைப்பாக இருக்கின்றன.
ஜனவரி–ஏப்ரல் மாதங்களில் ஆயிரக் கணக்கான முட்டைகள் இடப் படுகின்றன. ஏப்ரல்–ஜூலை மாதங்களில் இளவுயிரிகள் வளர்ந்து செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் முதிர்ச்சி நிலை அடைகின்றன. பொதுவாக, பருவ மழைக் காலங்களில், சென்னாக் கூனி கடலில் பெருமளவு காணப் படுவதற்குக் காரணம், இது இனப் பெருக்கத்தால் மட்டுமன்றி, கடல் நீரோட்டத்தாலும் பெருமளவு கரையை நோக்கித் தள்ளப்படுவதேயாகும். நவம்பர்–பிப்ரவரி மாதங்களில் வலைஞர்களால் பெருவாரியாகப் பிடிக்கப் படுகிறது. உடனடியாக விற்பனையாகாதவற்றைக் கடற்கரையில் உலர்த்திப் பக்குவப் படுத்தி விற்பர்.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 927)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9esawy9u/
தமிழ்“சென்னாக் கூனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9esawy9u/APA
Oliyon Research. (2026). சென்னாக் கூனி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9esawy9u/MLA
"சென்னாக் கூனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9esawy9u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment