அடிலேய்டு
aṭilēyṭu
தென் ஆசுதிரேலிய மாநிலத்தின் தலைநகர்; ஆசுதிரேலியாவின் மூன்றாவது பெரு நகரம்.
தென் ஆசுதிரேலிய மாநிலத்தின் தலைநகர்; ஆசுதிரேலியாவின் மூன்றாவது பெரு நகரம். இது தென் ஆசுதிரேலியாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ளது. அடிலேய்டு (Adelaide) நகரின் துறைமுகம் 11 கி.மீ. தூரத்தில் செயின்ட்டு வின்சென்ட்டு விரிகுடாவில் அமைக்கப் பெற்றுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 30 மீ. உயரத்தில் உள்ளது. இங்கு மத்தியதரைக் கடல் தட்ப வெப்ப நிலையான குறுகிய குளிர்ந்த மழை பெறும் மாரிக்காலமும், நீண்டு, வெப்பமான வறண்ட கோடைக் காலமும் நிலவுகின்றன.
இந்நகரைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் ஆடு மேய்க்கும் தொழில் சிறப்பானது; பால் கொடுக்கும் கால் நடைகளும் வளர்க்கப்படுகின்றன. பால்வளப் பொருள்கள், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, உரோமம், கம்பளங்கள் போன்றவை அடிலேய்டு துறைமுகத்தின் வழியாக ஏற்றுமதியாகின்றன.
இந்நகர், கி.பி. 1836–ஆம் ஆண்டில் நிறுவப்பெற்றது. இங்கு அடிலேய்டு பல்கலைக்கழகமும், தென்
அடிலேய்டு நகரம்
ஆசுதிரேலியப் பல்கலைக் கழகமும், ஏனைய கல்வி, பண்பாட்டு நிறுவனங்களும் இயங்குகின்றன. மக்கள் தொகை 900400 (1976).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 264)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9dtaw87v/
தமிழ்“அடிலேய்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9dtaw87v/APA
Oliyon Research. (2026). அடிலேய்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9dtaw87v/MLA
"அடிலேய்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9dtaw87v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment