அம்லாட் விதி
amlāṭ viti
அம்லாட் விதி என்பது மொழியில் வழங்கும் சொற்களின் மூல வடிவங்களை அறிய உதவும் ஒலி மாற்ற விதிகளில் ஒன்றாகும்.
அம்லாட் விதி என்பது மொழியில் வழங்கும் சொற்களின் மூல வடிவங்களை அறிய உதவும் ஒலி மாற்ற விதிகளில் ஒன்றாகும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை வகைப்படுத்தும் பொழுது ஒலி மாற்றங்களை வரலாற்று மொழியியலாளர்கள் அடிப்படையாகக் கொள்கிறார்கள். செருமானியக் குடும்ப மொழிகளில் (Germanic Language) கோதிக்கு (Gothic) மொழியைத் தவிர்த்து ஏனைய மொழிகளைப் பிரிப்பது அம்லாட் விதியாகும். அம்லாட் என்பது பலவகை ஒலி மாற்றங்களில் ஒருவகை. ஓரசையில் (Syllable) உள்ள உயிரொலி அடுத்த அசையில் வருகிற உயிரொலி அல்லது உயிர்மெய்யொலிக்கொப்ப மாற்றப்படுகிறது. இது பெரும்பாலும் அடிச் சொல்லில் (Stem) உள்ள பின்னுயிரொலி (Back Vowel) விகுதியில் உள்ள உயர் முன்னுயிர் ஒலி (High Front Vowel) அல்லது உயிர்மெய்யொலியால் முன்னுயிரொலியாக மாற்றப்படுகிறது. கோதிக்கு மொழியின் /hafjan/ என்ற வடிவம் பழைய ஐசலாண்டிக் (Old Icelandic) மொழியில் /hefja/ என்ற வடிவத்தோடு தொடர்புடையது. அடிச்சொல்லில் உயராத (Unraised) உயிரொலி உள்ளதைக் கோதிக்கின் வடிவம் காட்டுகிறது. கோதிக்கு பழைய ஐசுலாண்டிக், பழைய சேக்சன் (Old Saxon) ஆகிய மொழிகளின் சொற்களில் அடுத்து வருகின்ற அசையில் /J/ காணப்படுகிறது. இவ்வொலியின் செல்வாக்கில் கோதிக்குத் தவிர்த்த ஏனைய மொழிகளில் அடிச்சொல்லின் உயிரொலி /e/ ஆக மாறுகிறது.
செருமானிய மொழியில் –lic, – tin போன்ற விகுதிகள் சேரும்பொழுது அடிச்சொல்லில் உள்ள உயிரொலி முன்னுயிராக மாறுகிறது.
:::இவ்வொலி மாற்றத்தை
:::என ஆக்க வொலியியல் (Generative Phonology) காட்டும்.
துணை நூல்கள்
Bloomfield, L., “Language”, Motilal Banarsidass, Delhi, 1963.
Hockett, C.F., “A Course in Modern Linguistics”, The Macmillan Company, New York, 1966.
Schane, S.A., “Generative Phonology”, Printice — Hall, Inc. New Jersey, 1973.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 443)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bwtjepj/
தமிழ்“அம்லாட் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9bwtjepj/APA
Oliyon Research. (2026). அம்லாட் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bwtjepj/MLA
"அம்லாட் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9bwtjepj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment