அச்சணந்தியடிகள்
accaṇantiyaṭikaḷ
சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் தலைவனாகிய சீவகனின் ஆசிரியர் ஆவார்.
சீவகசிந்தாமணிக் காப்பியத்தின் தலைவனாகிய சீவகனின் ஆசிரியர் ஆவார். ஆரியநந்தி என்பது இவரது மற்றொரு பெயர். சீவகனுக்குப் பிறப்பு உணர்த்துகிற நிலையில் நாமகன் இலம்பகத்தில் இவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். கோவிந்தையார் இலம்பகத்தின் முதற் செய்யுளில் இவரது பெயர் ‘அச்சணந்தி’ என்று சுட்டப்படுகிறது. சீவகனைக் கட்டியங்காரனின் கொடுமையினின்றும் தப்புவித்துக் காலம் வரும்வரை வெளிப்படுத்திக் காட்டாது காப்பாற்றியவர்.
அச்சணந்தியடிகள் சீவகனுக்குத் தமது முற்பிறப்பு வரலாற்றினைக் கூறினார். இவர் முற்பிறப்பில் வெள்ளிமலையிலுள்ள வாரணவாசி என்னும் நகரத்தரசர். உலோகமாபாலன் என்பது இவரது இயற்பெயர். இவர் தவஞ்செய்யக் கருதித் தம் மகனுக்கு அரசளித்துத் தவவேடம் புனைந்து நோன்பு மேற்கொண்டார். ஆனால், முற்பிறப்பில் செய்த பாவத்தால் யானைத் தீ என்னும் நோய் இவருக்கு உண்டாகிப் பெரிதும் வருத்தியது. நீண்ட காலம் அதிலிருந்து இவர் விடுபட முடியவில்லை. சீவகனைக் கண்டவுடன் அந்நோய் நீங்கப் பெற்றார். ஆதலின், அவனிடம் பெரு விருப்புக் கொண்டு அவனுக்குக் கல்வி கற்பித்தார். கடமை முடிந்ததும் தவஞ் செய்தற்குச் சென்றார். சீவகன் இவரைப் பிரிவதற்கு வருந்தினாலும், இவர்தம் தவ நாட்டத்தை மறுத்தற்கு அஞ்சி உடன்பட்டான். பின்னர், அச்சணந்தியடிகள் இருபத்து நான்காம் தீர்த்தங்கரராகிய சீவர்த்தமானரைச் சரணமடைத்து நோன்பியற்றி முத்தியடைந்தார்.
சீவகனுக்குப் பிறப்புணர்த்திய அச்சணந்தியடிகள் அவன் அருகப் பெருமான் நெறியைத் தழுவுதல் வேண்டி நல் ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கற்பித்தார். நரகர், விலங்கு, மக்கள், தேவர் ஆகிய உயிர்கள் செல்லும் நெறியையும் காட்டினார்.வெ.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 158)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8ywf9ahv/
தமிழ்“அச்சணந்தியடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8ywf9ahv/APA
Oliyon Research. (2026). அச்சணந்தியடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8ywf9ahv/MLA
"அச்சணந்தியடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8ywf9ahv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment