நாட்டின் எல்லைகளைக் கண்காணிக்க நியமிக்கப் பெற்ற அரசு ஊழியர். கௌடில்யர் தாம் எழுதிய அர்த்த சாத்திரத்தில் 18 வகையான அரசாங்கப் பணியாளர்களுள் அந்தபாலரும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர், தலைச் சுமையாக வணிகப் பொருள்களைக் கொண்டு வரும் சிறு வணிகர்களிடம் ஒன்றேகால் பணம் சாலை வரியாக வாங்கும் உரிமையினைப் பெற்றிருந்தார்.