இராமதேவர்
irāmatēvar
மருத்துவம், சோதிடம் முதலியன வல்ல ஒரு சித்தர்.
மருத்துவம், சோதிடம் முதலியன வல்ல ஒரு சித்தர். இவர் நாகப்பட்டினத்தில் இருந்து புரிந்த சிவபூசைச் சிறப்பினால் சித்திகள் பல கைவரப் பெற்றார். இவர் மருத்துவம் வல்லவராய்ப் பல மருத்துவ நூல்களை இயற்றியுள்ளார். இவரது வைத்தியம் ‘இராமதேவர்’ வைத்தியம் என்று வழங்கப்படுகிறது. காசியிலிருந்து சட்டை நாதப் பெருமானை நாகப்பட்டினத்திற்குக் கொணர்ந்து, அங்கே அவருக்குக் கோயில் அமைத்துள்ளார். இன்றும் அது சட்டையப்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. இவர் பெயரால் பல மருத்துவ நூல்கள் அமைந்துள்ளன. இராமதேவர் அட்டாங்க பட்சிணி என்பது யோகம் பற்றிய நூல். கருக்கடைச் சுருக்கம் 500 என்னும் நூல் இரசவாதத் தொடர்பானது. கருமானசூத்திரம் 31, இராமதேவர் சூத்திரம் 380, இராமதேவர் சூத்திரம் 30, இராமதேவர் தண்டகம் ஆகியன இரசவாதம் பற்றியன. இராமதேவர் கேசரி, இராம தேவர் பட்சணி, இராமதேவர் விநோதப் பட்சணி, இராமதேவர் வைத்தியசூத்திரம் 81 ஆகியவை மருத்துவ நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் சோசியம் முதலியன சோதிட நூல்கள். இராமதேவர் சோதிடம், இராமதேவர் நிகண்டு, இராமதேவர் பாடை முதலிய நூல்களும் இவர் பெயரில் அமைந்துள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 122)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8v8382wm/
தமிழ்“இராமதேவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8v8382wm/APA
Oliyon Research. (2026). இராமதேவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8v8382wm/MLA
"இராமதேவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8v8382wm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment