எகிப்தின் பழைமையான சூரியக்கடவுள், இவர் இரா (Ra) என்றும் கூறப்படுகிறார். இரி (Re) எகிப்தியக் கடவுள்களுள் மிகச் சிறப்பானவராகக் கருதப்பட்டார். இத்தெய்வத்தின் வழிபாடு முதன் முதலாகக் கீழை எகிப்திலுள்ள எலியோபாலிசு (Heliopolis) என்னுமிடத்தில் தோன்றி, எகிப்து முழுமையும் சிறிது சிறிதாகப் பரவியது. எலியோபாலிசு நகரம் சூரியனின் நகரம் எனச் சிறப்பாகக் கூறப்பட்டது. எகிப்தின் ஏழாம் மரபினர் ஆட்சியின் பொழுது, இரி எகிப்து முழுவதிலுமிருந்த மக்களால் சூரியக் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். எகிப்து மக்கள் தங்களை இரி கடவுளின் கால்நடைகள் (The Cattle of Re) எனக் கூறினர். எகிப்திய அரசர்களான பாரோக்கள் (Pharaohs), இத்தெய்வத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டனர். தங்களை இரி தெய்வத்தின் மக்கள் எனக் கூறிக் கொண்டனர். ஆமோன் இரி (Amon–Re), மாண்டு–இரி (Montu–Re), கனும்–இரி (Khnum–Re) போன்ற தெய்வங்கள் இரி கடவுளின் வழிவந்தவையாகும். இரி