ஐங்கலைகள்
aiṅkalaikaḷ
பொருள்கள் · Senses
1.
சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அவை கலை எனப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அநீதை. இவை கீழிருந்து மேல் அடுக்காய்ப்பர்வியுள்ளன.ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூட, அழிப்பவனாகிய உருத்திரனும் உள்ளான். கீழ்க்கீழ் உள்ளவர் மேன்மேல் உள்ளவரால் படைக்கப்படுபவர். இக்கலைகளில் தத்துவங்களும் புவனங்களும் உள்ளன. இக்கலைகளிலுள்ள உலகங்கள் கீழிருந்து ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலே உள்ள சாந்திய தீத கலையிலுள்ள உலகங்கள் அழிவதே முற்றழிவு. அதாவது, சருவசங்காரம். அதுவே மகா சங்காரம் என்றும் சொல்லப்படும். ஆகவே, அந்த முற்றழிவைச் செய்பவன் மகாருத்திரன் எனப்படுவான். இவனையே சைவசித்தாந்தம் முதற்கடவுளாகிய சிவன் என்று கூறும். ஐந்து கலைகளுக்குரிய சஞ் ரிக்கும் கடவுள்கள் பின்வரு மாறு: 1. நிவிர்த்திகலை - பிரமன் 2. பிரதிட்டா கலை - விட்டுணு 3 வித்தியா கலை- உருத்திரன் 4. சாந்தி கலை - அனந்த தேவர் 5. சாந்திய தீத கலை - சதாசிவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rkc4upp/
தமிழ்“ஐங்கலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkc4upp/APA
Oliyon Research. (2026). ஐங்கலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rkc4upp/MLA
"ஐங்கலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rkc4upp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment