இணைய வரலாறு
iṇaiya varalāṟu
பொருள்கள் · Senses
1.
1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, இவ்வொருங்கிணைப்பில் ஓர் வலையமைவு பழுதுபட்டால் முழு ஒருங்கிணைப்பும் சிதையும்.ஆகவே,கணிப்பொறி ஒருங்கிணைப்புத்திட்டம் ஒன்றை அது உருவாக்கியது இத்திட்டம் தகவல் தொடர்பு விதிகளைத் தொகுத்தது.இதனால் ஒரு கணிப்பொறி,மற்றொரு கணிப்பொறியோடு தொடர்பு கொள்ளலாம் என்னும் நிலை உருவாயிற்று.இதில் ஒரு வலையம் (net) பழுதுபட்டால் ஏனைய வலையங்கள் வேலைசெய்யும்.இது நன்கு பரவியது.வணிக அமைப்புகள்,பல்கலைக்கழகங்கள் முதலிய கல்வி நிலையங்கள் இணையத்தைப் பயன்படுத்திப் பெருநன்மை பெறலாயின.ஆக,இணையம் 40 ஆண்டு நடைமுறை வரலாறு உடையது. தமிழக அரசும் 1999 இல் தமிழ் இணையத்தைத் தொடங்கியுள்ளது.ஆந்திராவும் இதில் முன்னோடியாக உள்ளது.பிற மாநிலங்களும் இதில் நாட்டம் செலுத்தி வருகின்றன. இணையம் இன்று உலகத்தைத் தன் கைக்குள் வைத்துள்ளது.இதன் தந்தை விண்டன் செர்ஃப்.பா.Computer, history of.
— internet, history of
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8r7pq9fn/
தமிழ்“இணைய வரலாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r7pq9fn/APA
Oliyon Research. (2026). இணைய வரலாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8r7pq9fn/MLA
"இணைய வரலாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8r7pq9fn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment