அலாரிப்பு
alārippu
பரத நாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிகழ்த்தப்படும் ஆடல்பகுதி அலாரிப்பு எனப்படும்.
பரத நாட்டிய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நிகழ்த்தப்படும் ஆடல்பகுதி அலாரிப்பு எனப்படும். இது, ஆடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், இறைவணக்கமாகவும் அவையினருக்கு வணக்கம் செய்வதாகவும் அமைந்திருக்கும் நடனப்பகுதி ஆகும். ஆடல் நிகழ்ச்சியில் கடினமான நடனப் பகுதிகளை நிகழ்த்துவதற்கு உடலை ஆயத்தம் செய்துகொள்ளும் முறையாக இது அமைந்திருக்கிறது என்றும் கருதப்படுகிறது. இது எளிய உடல் அசைவு முறைகளையும் முத்திரைகளையும் கொண்டதாகும். இதன் சொல்லுக்கட்டு, தாம்–தி–தாம்–கிட–தக–தை–தித்–தை என்பதாகும். இக்காலத்தில் ஆடல் கலைஞர்கள் அலாரிப்பில் வேறு சில கடினமான அடவுகளையும் இணைத்து நிகழ்த்துகின்றார்கள். காண்க: பரதநாட்டியம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 870)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nubx839/
தமிழ்“அலாரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nubx839/APA
Oliyon Research. (2026). அலாரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nubx839/MLA
"அலாரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nubx839/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment