அந்தோணிக்குட்டி அண்ணாவியார்
antōṇikkuṭṭi aṇṇāviyār
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவப் புலவர்களுள் ஒருவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாறை என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரை ஈழவ வகுப்பினர் என்றும், பரவ வகுப்பினர் என்றும் சொல்லுவார்கள். இவர் வீரமாமுனிவருடன் சேர்ந்து தமிழ்த் தொண்டும் சமயத்தொண்டும் புரிந்துள்ளார். இவருடைய தீய ஒழுக்கத்தினால் பாதிரிமார்கள் இவரைத் தம் குழுவிலிருந்து நீக்கி விட்டார்கள், பிறகு தம்முடைய தவற்றினை உணர்ந்து பாவ மன்னிப்புப் பெற்றுச் சமயப் பணிபுரியத் தொடங்கினார். இவர் ‘கிறித்தவ சங்கீதம்’ என்னும் நூலினை இயற்றியுள்ளார். இதில் பேரின்பக் காதல், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப்பத்து, அருள்வாசகம், சேசுநாதர் மரணம், திருப்புகழ், ஆனந்த மஞ்சரி, கீர்த்தனை முதலிய பாடல்கள் உள்ளன. பேரின்பக் காதல் என்னும் பகுதிக்கு முன்சி அண்ணாப்பிள்ளை உபாத்தியாயர் என்பார் பொழிப்புரை எழுதியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 378)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nhe6kn2/
தமிழ்“அந்தோணிக்குட்டி அண்ணாவியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nhe6kn2/APA
Oliyon Research. (2026). அந்தோணிக்குட்டி அண்ணாவியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nhe6kn2/MLA
"அந்தோணிக்குட்டி அண்ணாவியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nhe6kn2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment