நிலை உதை

nilai utai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆட்டம் தொடங்குவதற்கு முன், இரண்டு குழுவினரும் தங்கள் தங்களது பகுதிகளில் நின்று கொண்டிருக்க வேண்டும். நாணயம் சுண்டுவதின்மூலம் வெற்றி பெற்று, ஆடுகளப் பகுதியா அல்லது நிலை உதையா என்று தேர்ந்தெடுத்து, நிலை உதை உதைத்து ஆட்டத்தைத் தொடங்க இருக்கும் குழுவினரில் இருவர், ஆடுகள மையத்தில், வைத்திருக்கும் பந்தை ஆடிடவர வேண்டும். மற்ற எதிர்க்குழு ஆட்டக்காரர்களை அனைவரும் பந்தில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பாலே நின்று கொண்டிருக்க வேண்டும். நடுவரின் விசில் ஒலிக்குப்பிறகு நிலைப் பந்தாக வைக்கப் பட்டிருக்கும் பந்தை, ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் பகுதிக்குள் செல்லுமாறு பந்தை உதைக்க ஆட்டம் தொடங்கு கிறது. இதற்குத்தான் ஆரம்ப நிலை உதை என்று பெயர். ஆரம்ப நிலை உதை மூலம் உதைக்கப்படும் பந்து அதன் சுற்றளவு முழுவதையும் ஒரு முறை உருண்டு கடந்தால் தான் ஆட்டம் ஆரம்பமானது என்று கருதப்படும். மற்ற ஆட்டக்காரர்கள் பந்தை ஆடுவதற்கு முன்பாக, முதலில் நிலை உதையைத் தொடங்கிய ஆட்டக்காரரே இரண்டாவது முறையாகத் தானே ஆடக்கூடாது. — Place Kick
கலைச்சொல் · Technical கால்பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8m85mhgq/

தமிழ்
“நிலை உதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8m85mhgq/
APA
Oliyon Research. (2026). நிலை உதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8m85mhgq/
MLA
"நிலை உதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8m85mhgq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment