இராசராசக் கோவலராயன், முதலாம்
irācarācak kōvalarāyaṉ, mutalām
சோழருக்குட்பட்ட சிற்றரசன்.
சோழருக்குட்பட்ட சிற்றரசன். இவன் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு, அதனைச் சூழ்ந்த பகுதிகளை ஆண்டுவந்தான். இவன் கல்வெட்டுகள் கி.பி. 1181 முதல் கி.பி. 1221 வரை கிடைத்துள்ளதால், இவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனலாம். இவன் பெரும்பாலும் தன் தந்தைக்குப் பேருதவி புரித்துவந்தான்.
இவன் இரண்டாம் இராசராசச் சேதிராயன் என்னும் மலையமன்னனுக்கும் பூமாழ்விக்கும் பிறந்தவன் ஆவன்.
நீர்ப்பாசனப் பணிகள்
இவன் தன் தந்தையுடன் இணைந்து மக்கள் நலன் பேணும் பணியில் ஈடுபட்டான். விவசாயம் பெருகுதற் பொருட்டு நீர்ப்பாசனத்தைப் பெருக்கவும், குடிநீர் வசதியைப் பெருக்கவும் இவன் பாடுபட்டான். அத்திப்பாக்கம் என்னும் ஊரில் கி.பி. 1181–இல் குளம் ஒன்றினை அமைத்தான்; தன் தாயான பூமாழ்வியின் பெயரால் புத்தூர், பாலூர், கொல்லியூர் முதலான ஊர்களில் கால்வாய்கள் வெட்டி, நீர்ப்பாசனத்தைப் பெருக்கினான்.
அறக்கொடைகள்
இவன் கி.பி. 1200–இல் அறையணிநல்லூர் அண்ணலுக்கு நுந்தா விளக்குகள் எரிக்க 1500 குழி நிலங்களை விளக்குப் புறமாக அளித்துள்ளான். அடுத்துத் திருக்கோவலூர் வீரட்டானமுடையார் கோயிலிலுள்ள சேதிநாயகன், நாச்சியார், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரை உலாவரச் செய்யவும், அன்றாட அமுதுபடைப்பிற்கும் விழாக்காலங்களில் வைணவர்களை உண்பிக்கவும் இவன் நிலம் அளித்துள்ளான்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 31)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hk8r7ux/
தமிழ்“இராசராசக் கோவலராயன், முதலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8hk8r7ux/APA
Oliyon Research. (2026). இராசராசக் கோவலராயன், முதலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hk8r7ux/MLA
"இராசராசக் கோவலராயன், முதலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8hk8r7ux/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment