கார்பனும், ஹைட்ரஜனும் மட்டுமே அடங்கிய சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் எனப் படும். அவற்றுள், பாரஃபின்கள் ஒரு பிரிவாகும். அவை அல்கேன்கள் என்றும் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் பொது வாய்ப்பாடு CnH2n+2ஆகும். அல்கேன்கள் அல்லது பாராஃபீன் களிலுள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவுக்குப் பதிலாக, நைட்ரோ தொகுதி (-NO₂) பதிலீடு செய்யப்பட்ட வினை பொருள் நைட்ரோ அல்க்கேன் அல்லது நைட்ரோ பாராஃபின் ஆகும். நைட்ரோ மெத்தேன், நைட்ரோ எத்தேன், நைட்ரோ புரோப்பேன் முதலியன இவ்வகைச் சேர்மங்களின் சில எடுத்துக் காட்டுகள். இச்சேர்மங்கள் எண்ணெய், எஸ்ட்டர், கொழுப்பு, சாயம், செல்லுலோஸ் ரெசின் முதலியவற்றைக் கரைக்கும் கரைப்பானாகப் பயன் படுகின்றன. இனிய மணமுடைய இவை நீரில் 10% வரை கரையும். அதனால், சலவை சோப்புகளுக்கு மணம் ஊட்ட, நைட்ரோ பாராஃபின்கள் பயன் படுகின்றன. நைட்ரோ அல்க்கேன்களுக்குப் பெயரிடும் போது, அவற்றின் மூல ஹைட்ரோ கார்பன் பெயர்களின் முன்னால், நைட்ரோ என்னும் பகுதியைச் சேர்க்க வேண்டும். பன்னாட்டுத் தனி நிலை மற்றும் பயன் முறை வேதியியல் கழக (IUPAC) முறைப் படி, நைட்ரோ தொகுதி இணைந்திருக்கும் கார்பன் அணுவின் இடத்தை, எண்ணால் குறிப்பிட்டுப் பெயரிடப் படும் கீழ்க் காணும் சேர்மங்களின் பெயர்கள் இம்முறையில் பெயரிடப் பட்டிருப்பதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். │ NO₂ நைட்ரோ அல்க்கேன் சேர்மங்களிலுள்ள நைட்ரோ தொகுதி ஓரிணைய , ஈரிணைய அல்லது மூவிணைய கார்பன் அணுவுடன் இணைந்திருப்பதையொட்டி, அவை ஓரிணைய (1°) ஈரிணைய (2°) மூவிணைய (3°) நைட்ரோ அல்கேன் சேர்மங்கள் எனப் படுகின்றன. அவை பின் வருமாறு: மெத்தேன் வளிமத்தையும், நைட்ரிக் மற்றும் சல்ஃப்யூரிக் அமிலம் கலந்த கலவையையும், ஒரு குறுகிய உலோகக் சூழல் வழியே 400°C வெப்ப நிலையில் செலுத்தினால், நைட்ரோ மீதேன் உண்டாகும். இவ்வாறே மற்ற நைட்ரோ அல்க்கேன்களும் உண்டாக்கப் படுகின்றன. நைட்ரோ அல்க்கேன் சேர்மங்களில் இட மாற்றியம் (position isomeriser), தொடர் மாற்றியம் (chain isomeriser) ஆகிய மாற்றிய வகைகள் அமையும். இவை தவிர, வேதி இயல்புகளில் வேறுபாடு காண்பதான வினைத் தொகுதி மாற்றியங்களும் அமைகின்றன. இவற்றைப் பின் வரும் அமைப்பு மூலம் குறிப்பிடலாம். —அ. அரங்கசாமி