காண்டகாரில் பாரசீகத்தின் ஆளுநராக இருந்தவர். கி.பி. 1637 ஆம் ஆண்டில் பாரசீக அரசரின் வல்லாட்சியிலிருந்து தப்பியோடியவர். தில்லியில் புகலிடம் வேண்டி ஓடுமுன், காண்டகாரைச் (Kandahar) சாசகானுக்குக் (Shah Jahan) கொடுத்துவிட்டார். தில்லியில் அனைத்து மரியாதை- களுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், பல்வேறு காலக் கட்டங்களில் காசுமீரம், காபூல் போன்ற பகுதிகளின் ஆளுநராக நியமிக்கப் பெற்றார். பால்க்கு, பதக்சான் பகுதிகளின்மீது மொகலாயப் படையெடுப்பின்போது அலிமர்த்தன்கான் அதில் பங்கு கொண்டார். பொதுப்பணிகளை இவர் செவ்வனே நிறைவேற்றியதால் தில்லி அரண்மனை வாசிகள் இவரைப் போற்றிப் பாராட்டினர். அத்தகைய பொதுப்பணிகளுள் ஒன்று இவர் வெட்டிய வாய்க்காலாகும். இவ்வாய்க்கால் 192 கி.மீ. தொலைவு யமுனை ஆற்றிலிருந்து தில்லி வரை தோண்டப்பட்டு, இவருடைய பெயரையே தாங்கி நிற்கிறது.