அலைதர்வாசா
alaitarvācā
குதுப்மினாருக்கு அருகில் கில்சி மரபினைச் சேர்ந்த அலாவுதீன் கில்சி என்ற பேரரசரால் கி.பி.
குதுப்மினாருக்கு அருகில் கில்சி மரபினைச் சேர்ந்த அலாவுதீன் கில்சி என்ற பேரரசரால் கி.பி. 1310–இல் கட்டப்பட்ட தலை வாயில். குவ்வத்-உல்-இசுலாம் என்றழைக்கப்படும் மசூதிக்குள் நுழைவதற்கான தென்புற வாயில் இது. இவ்வாயில் சிவப்பு நிற மணற் கற்களையும் வெள்ளைப் பளிங்குக் கற்களையும் கொண்டு கட்டப்பட்டதாகும். இப்பொழுது இந்தியாவில் உள்ள தலைவாயில்களிலேயே மிகவும் அழகியது என்று இதை வல்லுநர்கள் கூறுகின்றனர். குரானில் உள்ள சொற்றொடர்களும் இசுலாமிய சமய நீதி நெறிகளும் இவ்வாயிலில் அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பேரரசர் அலாவு- தீன் கில்சியைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் இவ்வாயிலின் மேற்கு, தெற்கு, கிழக்கு வளைவுகளில் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலைவாயிலைக் கட்டி
அலைதர்வாசா
முடிக்கும் பணி நிறைவு பெற்றதும் அலாவுதீன் கில்சி குவ்வத்–உல்–இசுலாம் மசூதியை அதன் வடக்குப் புறத்தில் விரிவாக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால், இப்பணி முடிவடைவதற்குள் அலாவுதீன் கில்சி கி.பி. 1315–இல் இறந்தார். இப்பணி முடிவடைந்திருந்தால், மசூதியின் பரப்பு கிழக்கு–மேற்காக 240 மீட்டர், வடக்கு–தெற்காக 130 மீட்டர் இருந்திருக்கும். மசூதியின் வடக்குப் புறத்திலும் ஒரு வாயிலைக் கட்டும் பணியை அலாவுதீன் கில்சி மேற்கொண்டார். ஆனால் அப்பணியும் இன்றளவும் முடிவடையாத நிலையிலிருக்கிறது.அ.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 890)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8bm9zxx6/
தமிழ்“அலைதர்வாசா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8bm9zxx6/APA
Oliyon Research. (2026). அலைதர்வாசா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8bm9zxx6/MLA
"அலைதர்வாசா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8bm9zxx6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment