அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள சார்சியா மாநிலத்தின் (Georgia) தலைநகர். கி.பி.1837–ஆம் ஆண்டில் தெர்மினசு (Terminus) என்னும் பெயருடன் இந்நகரம் நிறுவப்பட்டது. இந்நகரின் பெயர், மார்தாசு வில்லி (Marthas Ville) என அட்லாண்டா கி.பி 1843–ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. கி.பி. 1845–ஆம் ஆண்டு முதல் இது அட்லாண்டா (Atlanta) எனக் குறிக்கப்படுகிறது. கி.பி. 1868–ஆம் ஆண்டு முதல் சார்சியா மாநிலத்தின் தலைநகரமாக இது விளங்கி வருகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்மாநிலங்களின் வாணிக நகரமாகவும் விளங்குகிறது. இதன் வழியாகப் பல்வேறு நகரங்களுக்கு இருப்புப் பாதை வழிகளும் நெடுஞ்சாலைகளும் பிரிந்து செல்கின்றன. இது தொழிற்சாலைகள் மிகுந்த நகரமுமாகும். இந்நகரத்தில் பல்கலைக்கழகமும் அருங்காட்சியகமும் நூல்நிலையங்களும் உள்ளன. மக்கள்தொகை 4,25,022 (1980).